Astronomy in Tamil
வானவியல் என்பது பூமியின் வளிமண்டலத்திற்கு வெளியே தோன்றும் அதிசிய நிகழ்வுகளை பற்றிய ஆய்வுகள் ஆகும். அதாவது சூரியன் , சந்திரன் மற்றும் கிரகங்கள், வால்மீன்கள், வாயு, விண்மீன்கள் ஆகிய நிகழ்வுகளை பற்றி ஆராய்ந்து கூறுவதுதான் வானவியல் ஆகும். கிரகங்கள் நட்சத்திரங்கள் ஆகியவை பால்வெளி மண்டலத்தில் உள்ள மையப் பகுதியை கொண்டு சுற்றி வருகிறது. இதே வரைபடத்தின் மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. astronomy in tamil மொழியில் படிப்பதற்கு இலகுவாக இந்த இணையதளத்தில் வாயிலாக கொடுத்துள்ளேன்.
நமது பூமியின் வெளிப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன என்று சொல்லப்படுகிறது. இந்த பல்லாயிரம் கணக்கான நட்சத்திரங்கள் சேர்ந்த தான் நமது பால்வழி அண்டம் ஆகும். நமது பால்வெளி அண்டத்தின் வெளிப்பகுதியில் பல லட்சம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இன்னும் ஏராளமான Galaxy இருக்கின்றன. இதில் நமக்கு அருகில் இருப்பது andromeda galaxy ஆகும்.
Milky way Galaxy (பால்வழி அண்டம்) :
வானவியலும் ஜோதிடமும் ஒரு வரலாற்றுத் தொடர்பு கொண்டவை. வானில் ஏற்படும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் மாற்றத்தை கொண்டு ஜோதிட பலன் நிர்ணயிக்கபடுவதால் ஜோதிடத்தை விஞ்ஞானம் என்று கூறப்படுகிறது. ஜோதிடம் என்பது ஒரு அறிவியல் என்பதற்கும் முக்கிய உதாரணம் இந்த வரைபடம் தான். இந்த பால்வெளி அண்டத்தில் தான் நமது சூரிய குடும்பம் அடங்கியுள்ளது. இந்த பால்வெளி அண்டம் என்பது ஒரு மிகப்பெரிய நம்மால் அளவிட முடியாத ஒரு அமைப்பாகும். இந்த milky way galaxy வடிவம் ஒரு தட்டையான ஆகும்.
நமது பூமியிலிருந்து தற்போதைய உள்ள தொழில்நுட்ப கருவிகள் மூலம் பார்க்கும் பொழுது மேற்பகுதி 7.5 டிகிரி மற்றும் கீழ் பகுதி 7.5 டிகிரி அளவில் கொண்டுள்ளது மொத்தம் 15 டிகிரி பருமனை கொண்டுள்ளது. இந்த milky way galaxy என்பது ஒரு வட்ட வடிவில் தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது. இதனுடைய விட்டம் 1,00,000 ஒளி ஆண்டுகள் கொண்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இதில் நமது சூரிய குடும்பம் என்பது 1 ஒளியாண்டு குறைவான பரப்பளவில் உள்ளது. பால்வெளி அண்டத்தில் மீதியுள்ள 99,999 ஒளி ஆண்டுகளில் ஏனைய நட்சத்திரங்கள் மற்றும் நம்மைப்போல் solar system இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

Milky way galaxy ல் மொத்தம் நட்சத்திரங்கள் 1000 கோடி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதைத் தவிர மற்ற வெளி வெளியிலுள்ள அண்டத்திலும் பல கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. இதில் உதாரணமாக நமது அருகில் இருப்பது andromeda Galaxy ஆகும். இதிலும் பல கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் காணப்படுகிறது. பால்வெளி அண்டத்தில் இருந்து andromeda Galaxy அண்டத்திற்கு உள்ள தொலைவு 25 லட்சம் ஒளியாண்டுகள் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
ஒளி ஆண்டு என்றால் என்ன? What is Light years ?
இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொன்றையும் நாம் ஒரு அளவீடு வைத்துள்ளோம். உதாரணமாக எடையை கிலோ கணக்கில் கணக்கிடுகிறோம். நிலத்தை மீட்டர்களில், அடிகளில் அளவீடுகிறோம். இதேபோலத்தான் நம்முடைய வான் மண்டலத்தையும் அளவிடுவதற்கு ஒளியாண்டு என்ற விகிதத்தில் அளவிடப்படுகிறது.
ஒளியாண்டு என்பது ஒளியின் வேகம் ஆகும். உதாரணமாக சூரியனிடமிருந்து நமக்கு ஒளி வருகிறது. இந்த ஒளியை நம்மால் அளவிட முடியும். இதை விஞ்ஞானிகள் சூரியனிடமிருந்து வரும் ஒளிக்கதிர்கள் 8 நிமிடம் ஆகிறது என்கிறார்கள். சூரியன் என்பது பூமியிலிருந்து 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆகவே ஒளியின் வேகம் நொடிக்கு 2,99,792 Km/sec (கிலோமீட்டர்/ நொடி) (3 Lakhs) என்ற விகிதத்தில் நமது பூமியை வந்து அடைகிறது. இதனால்தான் 15 கோடி கிலோமீட்டர் தொலைவைக் கடக்க 8 நிமிடம் எடுத்துக்கொள்கிறது.

Light years Calculation :
ஒளியாண்டு என்பது ஒளியின் வேகம் ஒரு வருடத்திற்கு கடக்கும் ஆனால் அதை ஒளி ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக ஒளியின் வேகம் 3 லட்சம் கிலோமீட்டர்/ நொடி என்றாள் ஒரு வருடத்திற்கு எத்தனை நொடிகள் என்று கணக்கிட வேண்டும். ஒரு வருடத்திற்கு 365.25x24x60x60 = 31,55,76,00 நொடிகள் (31.5576 கோடி நொடிகள் ) ஆகும்.
இந்த வருட நொடிகளை கொண்டு ஒளியின் வேகத்தோடு பெருக்க வேண்டும்.
உதாரணம் கணக்கு :
31.5576 கோடி நொடிகள் x 2,99,792 = 94,60,716.00 கோடி KM/Year
அதாவது ஒளியின் வேகம் ஒரு வருடம் கடப்பதற்கு 94,60,716 கோடி km/Year ஆகிறது. ஓராண்டிற்கு ஒளியை கடப்பதற்கு நாம் பயன்படுத்தும் கணக்குகளில் அளவிட்டால் அது மிகப்பெரிய எண்களாக காணப்படும். இதனால்தான் விஞ்ஞானிகள் விண்வெளியை (Space) அளப்பதற்கு ஒளியாண்டு என்ற விகிதத்தில் அளவிடுகிறார்கள்.
ஒரு ஒளி ஆண்டை கடப்பதற்கு ஒளி வேகத்தில் அதாவது 3 லட்சம் Kilometer/ sec நொடி என்ற விகிதத்தில் சென்றால்தான் இந்த 94,60,716 கோடி KM ரை ஒரு வருடத்தில் நாம் கடக்க முடியும்.
ஆனால் நம்மால் ஒளியின் வேகத்தில் 3 லட்சம் km/sec செல்ல முடியாது. தற்போது நாசா கண்டுபிடித்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் 6000 km/sec என்ற வேகத்தில் தான் பயணம் செய்ய முடியும்.
இந்த தற்போதைய உள்ள தொழில்நுட்ப வளர்ச்சி கொண்டு நாம் ஒரு ஒளியாண்டு கடப்பதற்கு 94,60,716 x 50 = 47,30,35,800 கோடி km ஒரு வருடத்தில் நாம் கடக்க முடியும். நம் தொழில்நுட்ப வளர்ச்சியை 50 மடங்கு பெருக்கினால் ஒளியின் வேகத்தை தொட்டுவிடலாம். உதாரணமாக சூரியன் பூமிக்கு இடையே உள்ள தொலைவு 15 கோடி கிலோ மீட்டர். இதை நாம் ஒளியின் வேகத்தில் சென்றால் 8.3 நிமிடத்தில் சென்று விடலாம். ஆனால் தற்போது உள்ள தொழில்நுட்பம் வளர்ச்சியில் 6000 km/sec மட்டுமே செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் light years என்றால் என்ன என்பதை புரிந்து இருக்கும். Astronomy in tamil ல் வழியாக ஒளி ஆண்டு என்றால் என்ன என்பதை இந்த இணையதளத்தின் மூலம் படித்தமைக்கு நன்றி.