ASTROLOGY BASICS IN TAMIL
ஜோதிட நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், பொதுவாகவே மக்கள் எல்லோருக்கும் ஜோதிடத்தில் ஒரு ஆரம்பம். எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்ன நடக்கப்போகிறது என்று ஒரு எதிர்பார்ப்பு. மேலும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை ஒரே நிலையாக இருப்பதில்லை. பொதுவாகவே மனிதனின் எதிர்பார்ப்பு ஒன்றாக இருக்கிறது நடப்பது ஒன்றாக இருக்கிறது. மனிதன் பிறப்பிலிருந்து இறக்கும் வரை பல இன்னல்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. இதெல்லாம் ஏன் நடக்குது எதற்காக நடக்கிறது என்று புரிவதில்லை. இதெல்லாம் நாம் பிறக்கும்போது கிரகங்களின் மற்றும் நட்சத்திரங்களின் வலிமையைப் பொருத்து நடைபெறுகிறது. இதை ஜோதிடம் என்ற சாஸ்திரத்தின் மூலம் கண்டறிய முடியும். Astrology basics ல் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது ராசி மண்டலத்தில் உள்ள 9 கிரகங்கள், 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் இவை இல்லாமல் ஜோதிடம் கணிக்க இயலாது.
ஜோதிடம் என்பது ஒரு அறிவியல் உண்மையாகும். அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் இடையே உள்ள ஒரு தொடர்புதான் ஜோதிடம். அண்டம் என்பது பால்வெளி அண்டத்தையும் அதிலுள்ள பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்களையும் குறிக்கும். அதே பிண்டம் என்பது நமது உடம்பில் உள்ள உறுப்புகளையும் மற்றும் இயக்கத்தையும் குறிக்கும். மேலும் பால் வழி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களின் ஆற்றலுக்கு ஏற்பார் போல் நமது உடல் மற்றும் வாழ்க்கை நிலை அமையப்பெற்றிருக்கும்.
நாம் வாழ்கின்ற பூமியிலிருந்து விண்வெளியில் அனேக கிரகங்கள் ( PLANETS ) மற்றும் நட்சத்திரங்கள் ( STARS ) காணப்படுகிறது. அதனடிப்படையில் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒருவித கதிர்வீச்சு அலைகள் நம் பூமியை வந்தடைந்து ஒருவித தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த கதிர்வீச்சுகள் நாம் வாழும் பூமியில் உள்ள உயிரினங்களின் செயல்பாடுகளை அடக்கி ஆளுமை செய்கிறது .

ஜோதிடம் என்றால் என்ன?
ஜோதிடம் என்று ஏன் அழைக்கப்படுகிறது என்பதற்கு விளக்கம் ஜோதிடம் என்பது ஜோதி + இடம் = ஜோதிடம் என்பதாகும். ஜோதி என்றால் வெளிச்சம் இடம் என்றால் பூமியின் மேற்பரப்பு ஆகும். அதாவது சூரியன் மையமாகக் கொண்டு நமது பூமி நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. பூமியானது 23 ½ டிகிரி அளவில் சாய்வாக சுற்றிவருகிறது. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் ஆகிறது. சூரியனை பூமி நீள் வட்டப் பாதையில் ஒரு முறை சுற்றிவர 365.25 நாட்கள் ஆகிறது. அதேபோல் பூமியின் வெளிச்சம் நீள்வட்ட பாதையில் சுற்றி வரும்போது ஒருபுறம் வெளிச்சமும் ஒருபுறம் இருட்டையும் உண்டாகிறது. இதனால் பகல் மற்றும் இரவு ஏற்படுகிறது. ஆனால் இந்த வரைபடத்தில் காண்பது போல் பகல் மற்றும் இரவு ஒவ்வொரு மாதமும் பூமியின் மேல் இடம் மாற்றிக் கொண்டே செல்கிறது.
மேலும் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் பூமியில் படும் ஒளியானது மாறி மாறி கொண்டே செல்வதால் பருவ நிலை மாற்றம் அடைகிறது. இதனால் வரைபடத்தில் காட்டியது போல் கோடை காலம், குளிர்காலம், வசந்த காலம், இலையுதிர்காலம் போன்ற காலங்கள் உண்டாகின்றன.
இதை நம் வரைபடத்தில் காணலாம். உதாரணமாக ஏப்ரல் மே ஜூன் ஆகிய மாதங்களில் நமது இந்தியா நாட்டின் மீது அதிக வெப்பத்தை கொடுக்கிறது. இந்த காலகட்டத்தை நாம் கோடை காலம் என்று குறிப்பிடுகிறோம். அதேபோல் ஒவ்வொரு மாதமும் சூரியனின் வெளிச்சம் மாறிக் கொண்டே செல்கிறது. இதுதான் ஜோதி இடம்பெயர்தல் என்று சொல்லி ஜோதிடம் என்று அழைக்கப்படுகிறது. ஜோதிடம் என்பது மனிதனின் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ( past, present, Future ) இவற்றில் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் கண்டறிவதே ஜோதிடம் ஆகும்.
வரைபடம் 1 :

வரைபடம் 2 :

கே பி ஜோதிடம் என்றால் என்ன?
ஜோதிடத்தில் பல வகை முறைகளில் பலன் சொல்லப் படுகிறது. உதாரணமாக பாரம்பரிய ஜோதிடம், நாடி ஜோதிடம், திருக்கணித பஞ்சாங்க முறை, வாக்கிய பஞ்சாங்க முறை என்று பலவகை ஜோதிடம் முறைகள் உள்ளன. இவை அனைத்தும் அக்காலகட்டங்களில் மக்கள்தொகை குறைவாக இருந்ததால் அந்த ஜோதிட முறை பொருந்தியது. ஆனால் தற்போது மக்கள் தொகை அதிகமாக உள்ளதால் அதாவது ஒரு நிமிடத்திற்கு இந்தியாவில் மட்டும் சராசரியாக 40 குழந்தைகள் பிறக்கின்றது என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் ஒரு நாளைக்கு 40 x 60 x 24 = 57600 குழந்தைகள் பிறக்கின்றன. இதை இந்த லிங்கின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
https://www.medindia.net/patients/calculators/pop_clock.asp
அப்படி என்றால் ஒரு நாளைக்கு பிறக்கும் 57600 குழந்தைகளுக்கும் ஒரே ஜாதக அமைப்பு இருக்குமா? மேலும் நவாம்சத்தை வைத்து பார்த்தல் கூட ஒரு நட்சத்திரத்தை நான்கு பாகங்களாக பிரித்து பார்க்க முடியும். அப்படி என்றால் கூட 57600/4 = 14400 குழந்தைகளுக்கும் வெவ்வேறு ஜாதக பலன் சொல்ல முடியுமா? அப்படி என்றால் பாரம்பரிய ஜோதிடத்தையும் மற்ற ஜோதிடம் முறைகளையும் குறை கூறுவது அல்ல. எந்த முறையில் பார்த்தாலும் ஜோதிட முறை சரியானதாக அமைய வேண்டும். அப்படிப் பார்க்கையில் கே பி ஜோதிட முறையில் சரியான பலனையும் ஜோதிடத்தின் துல்லியத்தை கூறுகிறது.
கே பி ஜோதிட முறை என்பது அடுத்த பரிணாம வளர்ச்சி என்று சொல்லலாம். இந்த ஜோதிடசாஸ்திரத்தை முதல்முறையாக ஜோதிட மேதை மீனா கோபாலகிருஷ்ணன் அவர்களால் 243 உப நட்சத்திரத்தின் மூலம் புதிய ஜோதிட முறை உருவாக்கினார். மேலும் இந்த ஜோதிட முறையை மேம்படுத்தும் வகையில் அதே நூற்றாண்டில் வாழ்ந்த கே எஸ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மேலும் 6 உப நட்சத்திரத்தை கண்டுபிடித்து மொத்தம் 249 உப நட்சத்திரமாக கண்டுபிடித்து புதிய ஜோதிட முறையை உருவாக்கினார். இந்த ஜோதிட முறையை கே பி ஜோதிட முறை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஜோதிட முறையின் மூலம் ஒரு தனி மனிதனின் ஜாதக பலனை சொல்வதே கேபி ஜோதிட முறையாகும். கேபி ஜோதிடத்தைப் பற்றி முழுமையாக படிக்க இந்த இணையதளத்தில் kp astrology course tamil என்ற பக்கத்தில் முழுமையான பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் பயின்று கேபி ஜோதிடத்தின் அடிப்படையை தெரிந்து கொள்ளவும்.
Rasi Mandalam : (astrology basics in tamil)
வட்டத்தின் சுற்றளவு 360 டிகிரி ஆகும். அதே போல் ஒரு ராசி மண்டலம் என்பது 360 டிகிரி கொண்டது. ராசி மண்டலத்தை 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 12 ராசிகள் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ராசியும் 30 டிகிரி கொண்டது (30 x 12= 360). மேலும் ராசி மண்டலத்தை 27 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதை நட்சத்திரம் என்று அழைக்கிறோம். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் 13 ͒ – 20’ (டிகிரி- மினிட்) என்ற வீதத்தில் பிரிக்கப்பட்டுள்ளது ( 13 ͒ – 20’ x 27 = 360 ͒ ).
ஒரு நட்சத்திரம் என்பது 4 பாதங்களைக் கொண்டது. ஒரு நட்சத்திர பாதம் 3 ͒ – 20’ (டிகிரி- மினிட்) அளவை கொண்டது. ஒரு நட்சத்திரம் 9 (ஒன்பது) பாதங்களைக் கொண்டது. ஒரு ராசி மண்டலம் 108 பாதங்களை கொண்டது (9 x 12=108).

வான் மண்டலத்தில் சூரியனை மையமாக கொண்டு கோள்கள் அனைத்தும் சுற்றி வருகின்றன. அதில் முதல் கோலாக புதன், இரண்டாவதாக வெள்ளி, மூன்றாவதாக பூமி, நான்காவதாக செவ்வாய், ஐந்தாவதாக குரு, ஆறாவதாக சனி இவை மட்டும் ஜோதிடத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. பூமியைச் சுற்றி வரும் சந்திரனையும் கிரகமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.மேலும் பூமியைச் சுற்றி வரும் சந்திரனையும் கிரகமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலும் சந்திரனின் அடிப்படையில் நிகழும் இரண்டு வெட்டுப்புள்ளிகள் ஆன அதாவது நிழல் கிரகங்களான ராகு கேது ஆகியவற்றை ஜோதிடத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
வான் மண்டலத்தில் சூரியனை மையப்படுத்தி சுற்றிவரும் யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய கிரகங்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. ஏனென்றால் அவை மூன்றும் கிரகங்கள் அல்ல. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக சூரியனைச் சுற்றி அனைத்து கோள்களும் சுற்றி வந்தாலும் ஜோதிடத்தில் (astrology ) பூமியை மையமாகக் கொண்டு அனைத்து கோள்களும் (planets) சுற்றி வருவதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
Astrology basics ல் காலச்சக்கரத்தின் படி ராசி கட்டத்தில் உள்ள ராசிகளை கீழ்கண்டவாறு வீடுகளாக கூறப்படுகிறது.
- மேஷ ராசியை முதல் வீடாகவும்
- ரிஷப ராசியை இரண்டாம் வீடாகவும்
- மிதுன ராசியை மூன்றாம் வீடாகவும்
- கடக ராசியை நான்காம் வீடாகவும்
- சிம்ம ராசியை ஐந்தாம் வீடாகவும்
- கன்னி ராசியை ஆறாம் வீடாகவும்
- துலாம் ராசியைஏழாம் வீடாகவும்
- விருச்சிக ராசியை எட்டாம் வீடாகவும்
- தனுசு ராசியை ஒன்பதாம் விடவும்
- மகர ராசியை பத்தாம் வீடாகவும்
- கும்ப ராசியை பதினொன்றாம் வீடாகவும்
- மீன ராசியை பன்னிரண்டாம் வீடாகவும்
இவ்வாறாக ராசிகளை வீடுகளாக கணக்கிடப்படுகிறது. இதில் ஒவ்வொரு வீடுகளும் 30 டிகிரி அளவைக் கொண்டுள்ளது.
ராசி மண்டலம் 360 டிகிரி :

நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்களின் காரகத்துவங்கள் லிங்க் (Link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.