How to know Navamsa chart in Tamil astrology

Navamsa chart analysis :

நவாம்சம் கட்டம் என்பது Vedic astrology -ல் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.  பாரம்பரிய ஜோதிடத்தில் ராசி கட்டத்தில்  ஒவ்வொரு   கிரகமும் எந்த வீட்டில்  இருக்கிறது என்று  பார்த்து பலன் சொல்வது சரியான முறை இல்லை.  நவாம்ச கட்டத்தை பார்த்து எந்த கிரகம் எந்த நட்சத்திரம் பாதத்தில் உள்ளது என்றும் பஞ்சபூத   நிலையில் எங்கு உள்ளது என்றும் பலன் சொல்வதே சரியான முறையாகும். அது எவ்வாறு என்று நாம் பார்க்கலாம். Navamsa chart கணிக்க வேண்டுமென்றால் அதற்கு முன்பு ஒரு சில விஷயங்கள் நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

முதலில் 27 நட்சத்திரங்கள்  மற்றும் 4  பாதங்கள் நினைவில் கொள்ளவேண்டும். மேலும் 4 நட்சத்திர பாதங்களை எந்தெந்த ராசி கட்டத்தில் இருக்கிறது என்று நினைவில் கொள்ள வேண்டும். நமது வான் மண்டலத்தின்  360  டிகிரியை 120  டிகிரி என்று 3  பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது ராசி மண்டலத்தில் இருந்து ஒவ்வொரு திசையிலும்  வரும் நட்சத்திர ஆற்றலை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பஞ்சபூதத்தின் அடிப்படையிலும் மற்றும்  திரிகோண  ராசிகளின் அடிப்படையிலும் பிரிக்கப்படுகிறது. இதில் நவகிரகங்கள் ஆன 9  கிரகத்திற்கும் 27 நட்சத்திரங்களை ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும்  3 அதிபதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அடுத்ததாக கிரகங்களை விம்சோத்தரி தசா அடிப்படையில் நாம் வரிசையாக நினைவில் கொள்ள வேண்டும்.  அதாவது  கேது, சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன் போன்ற வரிசையில் தசாபுத்திகள் மாறுபட்டு வரும். இந்த ஒவ்வொரு  கிரகத்திற்கும்  தசை வருடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  இவை மொத்தம் 120  வருடங்கள் என்று விம்சோத்தரி  முறை அடிப்படையில் கொண்டுள்ளது.

வரிசை எண்  நவகிரகங்கள்  1 – அதிபதி  2 – அதிபதி  3 – அதிபதி  தசா வருடங்கள்
1 கேது அஸ்வினி மகம்  மூலம் 7 வருடங்கள்
2 சுக்கிரன் பரணி பூரம் பூராடம் 20 வருடங்கள்
3 சூரியன் கார்த்திகை உத்திரம் உத்திராடம் 6 வருடங்கள்
4 சந்திரன் ரோகிணி அஸ்தம் திருவோணம் 10 வருடங்கள்
5 செவ்வாய் மிருகசீரிஷம் சித்திரை அவிட்டம் 7 வருடங்கள்
6 ராகு திருவாதிரை சுவாதி சதயம் 18 வருடங்கள்
7 குரு புனர்பூசம் விசாகம் புரட்டாதி 16 வருடங்கள்
8 சனி பூசம் அனுஷம் உத்திரட்டாதி 19 வருடங்கள்
9 புதன் ஆயில்யம் கேட்டை ரேவதி 17 வருடங்கள்
vimsottari dasa years

27 நட்சத்திரங்கள் மற்றும்  பாதங்கள்:

27 நட்சத்திரங்கள் மற்றும்  பாதங்கள்:

 பஞ்சபூதம் ராசிகளின் விளக்கம் :

Navamsa chart முறையில்  ஒவ்வொரு  நட்சத்திரமும் 4 பாதங்களை கொண்டுள்ளது.  அதன்படி ஒவ்வொரு  நட்சத்திர பாதத்திற்கும்  தனித்தனி  பஞ்சபூத ஆற்றல்கள்  உள்ளன.  அதாவது  வரைபடத்தில் குறிப்பிட்டவாறு  காலச்சக்கரத்தின் முதல் ராசி மேஷத்தில் இருந்து  மீனராசி வரை நெருப்பு, பூமி,  காற்று, நீர் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பலனை முழுமையாக அறிவதற்கு நவாம்சம் என்ற கட்டத்தை பார்க்கலாம்.

 இவை திரிகோண ராசிகளான 1,5,9 – 2,6,10 – 3,7,11 – 4,8,12 இவற்றின் அடிப்படையில் பஞ்சபூதங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. 

1,5,9  என்பது  மேஷம் சிம்மம்  தனுஷ் – நெருப்பு

2,6,10   என்பது  ரிஷபம்  கன்னி  மகரம் – பூமி,

3,7,11  என்பது  மிதுனம்  துலாம்  கும்பம் – காற்று

4,8,12   என்பது  கடகம்  விருச்சிகம்  மீனம் – நீர்

பஞ்சபூதம்  ராசிகள்

நவாம்சம் கணிக்கும் முறை :

நவாம்சம் கணிப்பதற்கு ராசி கட்டத்தில் உள்ள லக்னம் மற்றும் கிரகங்களை எந்தெந்த ராசி நட்சத்திர பாதத்தில் உள்ளது என்று பஞ்சாங்கத்தின் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.  உதாரணமாக வரைபடம் 1-ல்  லக்னம் ஆனது  கும்பம் – அவிட்டம் 4-ம் பாதத்தில் – செவ்வாயின் நட்சத்திர அதிபதியாக உள்ளது.

  • லக்னத்தில் இருந்து பார்க்கும்போது லக்னத்தில் ராகு – புரட்டாதி  மூன்றாம் பாதத்தில் – குருவின் நட்சத்திர அதிபதியாக உள்ளது.
  • மூன்றாம் இடத்தில் இருக்கும்   சூரியன்-  அஸ்வினி மூன்றாம் பாதத்தில் – கேதுவின் நட்சத்திர அதிபதியாக உள்ளது.
  • 3-ம் வீட்டில் இருக்கும்   புதன்-  அஸ்வினி மூன்றாம் பாதத்தில் – கேதுவின் நட்சத்திர அதிபதியாக உள்ளது.
  • மூன்றாம்  வீட்டில் இருக்கும்    குரு-   பரணி  ஒன்றாம் பாதத்தில் – சுக்கிரனின் நட்சத்திர அதிபதியாக உள்ளது.
  • நான்காம்  வீட்டில் இருக்கும் சுக்கிரன்- ரோகிணி நான்காம் பாதத்தில்-  சந்திரனை நட்சத்திர அதிபதியாக உள்ளது.
  •  ஐந்தாம் வீட்டில் இருக்கும் சந்திரன்- திருவாதிரை மூன்றாம் பாதத்தில்- ராகுவின் நட்சத்திர அதிபதியாக உள்ளது.
  • ஏழாம் வீட்டில் இருக்கும் கேது- உத்திரம்  ஒன்றாம் பாதத்தில் – சூரியன் நட்சத்திர அதிபதியாக உள்ளது.
  • பதினொன்றாம் வீட்டில்   இருக்கும் சனி- மூலம் மூன்றாம் பாதம் –  கேதுவின் நட்சத்திர அதிபதியாக உள்ளது.
  •  பன்னிரண்டாம் வீட்டில் இருக்கும் செவ்வாய்- திருவோணம் இரண்டாம் பாதத்தில் –  சந்திரனின் நட்சத்திர அதிபதியாக உள்ளது.

வரைபடம் 1 – Rasi chart :

navamsa chart in tamil

வரைபடம் 2 Navamsa chart :

navamsa chart in tamil

திரிகோண ராசிகளான மேஷம்,  சிம்மம்,  தனுசு  – 1, 5, 9 – ல் நட்சத்திர பாதம் 1 பாதம் முதல் 4 பாதம் வரைபடத்தில் உள்ளவாறு நினைவில் கொள்ள வேண்டும். அடுத்ததாக நவகிரகங்களை   விம்சோத்தரி தசா அடிப்படையில் கேது, சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, புதன் ஆகிய கிரகங்களை   வரைபடத்தில் உள்ளவாறு  திரிகோண வடிவில் நினைவில் கொள்ள வேண்டும்.  அதாவது மேஷத்தில்- (கேது, சந்திரன், குரு)  மற்றும்  சிம்மத்தில் ( சுக்கிரன் செவ்வாய் சனி)  மற்றும்  தனுசு ராசியில் – சூரியன் ராகு புதன் இதனடிப்படையில் navamsa chart ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.

  • லக்னம் – அவிட்டம் (4) – செவ்வாய்  நட்சத்திரத்தில்  உள்ளது.  வரைபடம் 2 – ல் செவ்வாய் எங்கு உள்ளது என்று நினைவில் கொள்ள வேண்டும்.   அதாவது செவ்வாய் கன்னிராசியில் உள்ளது.  கன்னி ராசியில் இருந்து நான்கு கட்டம் எண்ணி வர விருச்சிக  ராசியில் லக்னம் வருகிறது. அதன்படி நவாம்ச கட்டத்தில் லக்னம் எழுதப்பட வேண்டும்.
  • ராகு- புரட்டாதி (3) –  குரு நட்சத்திரத்தில் உள்ளது. வரைபடம் 2 -ல்  உள்ளவாறு குரு எங்கு உள்ளது என்று  நினைவில் கொள்ள வேண்டும். அதாவது குரு  மேஷத்தில் உள்ளது. மேஷ ராசியில் இருந்து மூன்றாம் கட்டம் எண்ணி வர மிதுனத்தில் வருகிறது. அதன்படி நவாம்ச கட்டத்தில் ராகு எழுதப்பட வேண்டும்.

இப்படியாக ஒவ்வொரு கிரகத்தையும் நம் எடுத்து நாம் நவாம்ச கட்டத்தில் எழுத வேண்டும். இப்படியாக Navamsa chart  டை எழுதி ஜாதக பலனை துல்லியமாக நிர்ணயம் செய்ய வேண்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *