How to know rasi kattam in tamil astrology

RASI KATTAM

வான் மண்டலத்தில் நமது  பூமியின் வெளிப்பகுதியை சுற்றி வட்ட வடிவில் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த வட்ட வடிவில்  உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை ராசி மண்டலம் என்று சொல்கிறோம். ராசி  மண்டலம் என்பது மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் போன்ற 12  ராசிகளும் மற்றும் சூரியன் , சந்திரன், செவ்வாய்,  குரு, சனி, புதன், சுக்கிரன் செயற்கை கிரகங்களான ராகு, கேது  போன்ற 9  நவக்கிரகங்களும்  மற்றும்  அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகினி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம்,  பூசம், ஆயில்யம்,  மகம், பூரம்,  உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், புரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி வரை உள்ள 27  நட்சத்திரங்களும் உள்ளடக்கியதுதான் ராசி மண்டலம் ஆகும். இதையே rasi kattam என்று அழைக்கப்படுகிறது

ஒரு வட்டத்தின் சுற்றளவு 360 டிகிரி ஆகும். அதேபோல் வான் மண்டலம் 360 டிகிரி அளவைக் கொண்டது .  360 டிகிரியை 12 பாகங்களாக பிரித்து  ஒவ்வொரு ராசிக்கும் சமமாக 30  டிகிரி என்ற  அளவைக் கொண்டுள்ளது.  அதை போல் ஒவ்வொரு நட்சத்திரத்தின் அளவும்  13 டிகிரி  20 மினிட்ஸ் என்ற அளவை கொண்டுள்ளது.

Rasi kattam

rasi kattam என்பதற்கு உதாரணமாக வரைபடத்தில் இருந்து தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது  சூரியனை மையமாகக் கொண்டு கிரகங்கள் அனைத்தும் சுற்றி வருகின்றன. அதில் முதல் கிரகமாக புதன், இரண்டாவதாக சுக்ரன், மூன்றாவதாக நமது பூமி, நான்காவதாக செவ்வாய், ஐந்தாவதாக குரு, ஆறாவதாக சனி, மற்ற கிரகங்களும் சுற்றி வருகின்றன. சந்திரன் நமது பூமியை சுற்றி வருகிறது. அடுத்ததாக மிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது ராசி கட்டம் என்பது சூரியனை மையமாகக் கொண்டு எடுக்கப்படுவதில்லை பூமியை மையமாகக் கொண்டு தான் எடுக்கப்படுகிறது. மேலும் ராசி கட்டத்தில் சூரியனை வைத்து லக்னம் கணிக்கப்படுகிறது. சந்திரனை வைத்து ராசி நட்சத்திரம் கணிக்கப்படுகிறது. ஜென்ம ராசி ஜென்ம நட்சத்திரம் கணிப்பது பற்றி வேற பதிவில்  பதிவிட்டுள்ளேன் பார்த்துக்கொள்ளவும்.

ராசிகளின் அடையாளக் குறியீடுகள் :

ஜோதிடத்தில்  ஒவ்வொருவரும் பொதுவான குணாதிசயங்களை கொண்டிருப்பார்கள் என்று நம் முன்னோர்கள் அக்காலகட்டத்தில் சொல்லியிருக்கிறார்கள்  மற்றும்  அதற்கான குறியீட்டை அதாவது உருவத்தை கொடுத்துள்ளனர்.  அந்த வகையில்  மேஷம் ராசிக்கு ஆடு போன்ற உருவத்தையும்  மற்றும்  மேஷராசிக்காரர்களுக்கு ஆடு போன்ற குணாதிசயங்கள் இருக்கும் என்று  சொல்லியிருக்கிறார்கள்.  இப்படியாக 12 ராசிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படியாக 12 ராசிக்காரர்களுக்கும்  குறியீட்டின் பிரகாரம் அவர்களின் குணாதிசயங்கள் மற்றும் வாழ்க்கையும் அமைந்திருக்கும்.

 மேஷம் – ஆடு

ரிஷபம் –  மாடு

மிதுனம் – இரட்டையர்

கடகம் – நண்டு

சிம்மம் –  சிங்கம்

கன்னி –  கன்னிப்பெண்

துலாம் –  தராசு

விருச்சிகம் –  தேள்

தனுசு – வில்

மகரம் –  முதலை

கும்பம் –  பானையுடன் மனிதன்

மீனம் – இரட்டை மீன்

RASI KATTAM -  அடையாளக் குறியீடுகள்
RASI KATTAM – அடையாளக் குறியீடுகள்

ஆண் ராசி பெண் ராசி :

 ஆண் ராசி :

மேஷம்:  கால சக்கரத்திற்கு முதல் ராசி மேஷம். மேஷ ராசியின் பொதுவான குணாதிசயங்கள்  சுய முயற்சியில் வெற்றி கொள்பவர், மரியாதைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர், எதையும் அனுபவிக்கும் யோகம் உள்ளவர், தனித்தன்மை  மிகுந்தவர், சாதனை படைக்கும் திறன்  உள்ளவர் போன்றவை ஒரு சில கூறலாம்.

மிதுனம் : காலச்சக்கரத்தின் மூன்றாவது ராசி  மிதுனம். உடம்பில் உள்ள நரம்பு மண்டலங்கள்  பாதிப்பு உள்ளவர்களாக இருப்பார்கள், கோல் சொல்பவர்கள் ஆக இருப்பார்கள், ஒருவரின் ஆரம்பக்கல்வியை குறிக்கும், குறுகிய பயணம் செய்வதை குறிக்கும், விடாமுயற்சி செய்பவர்களாக இருப்பார்கள், தைரியம் மிக்க  மனிதர்களாக உள்ளவர்களாக இருப்பார்கள், எழுத்தாளர்களாக இருப்பார்கள் போன்ற ஒரு சிலவற்றை கூறலாம்.

சிம்மம் : காலச்சக்கரத்தின்   ஐந்தாவது ராசி சிம்மம். ஒரு உயிரை உருவாக்கும் சக்தி படைத்தவர்களாக இருப்பார்கள்  தன்னைத்தானே அழகுப்படுத்திக்  கொள்பவர்களாக இருப்பார்கள் சிற்றின்பத்தில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள் கமிஷன் தொழிலில் அதிகம் சம்பாதிக்க கூடியவர்களாக இருப்பார்கள் எதையும் உணர்வுபூர்வமாக சிந்திக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.

துலாம் : காலச்சக்கரத்தின் ஏழாவது ராசி  துலாம். சட்டத்திற்கு கட்டுப்பட்டு இருப்பார்கள், மற்றவர்களுடன் நீண்டநாள் பழக கூடியவர்களாக இருப்பார்கள்,  எல்லாவற்றிலும் மற்றவர்களை இணைத்துக் கொள்வார்கள், சமூக அங்கீகாரம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

தனுசு : காலச்சக்கரத்தின் ஒன்பதாவது திசை தனுசு. அதிக நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பார்கள், எப்போதுமே தியான சிந்தனை அதிகம் இருக்கும், வெளிநாடு செல்பவர்களாக இருப்பார்கள், சட்டம் ஒழுங்கு போன்ற நீதித்துறைகளில்  பொறுப்பில் இருப்பவர்கள், முன் பிறவியில் செய்யும் பாவபுண்ணியம் இந்த பிறவியில் அனுபவிப்பார்கள்.

கும்பம் : காலச்சக்கரத்தின் 11வது ராசி கும்பம். எடுத்த காரியங்களில் வெற்றி உடையவர்களாக இருப்பார்கள், எளிதில் திருப்தி அடைந்தவர்களாக இருப்பார்கள், ஆசைகள்  நிறைவேறும் மனிதர்களாக இருப்பார்கள், ஒரு துறை  டாக்டர் பட்டம் பெற்று  முதுநிலை கல்வியை பூர்த்தி செய்பவர்களாக இருப்பார்கள், அதிக உல்லாசத்தில் ஈடுபடுவதாக இருப்பார்கள் , அதிக உடலுறுதி மிக்கவர்களாக இருப்பார்கள்.

 பெண் ராசி :

 ரிஷபம் : காலச்சக்கரத்தின் இரண்டாவது ராசி ரிஷபம். சுவையான உணவினை உட்கொள்ளும் அமைப்பு  உள்ளவர்களாக இருப்பார்கள், தன் சொந்த கருத்துக்களை விளக்கும் தன்மை உள்ளவர்கள், பணத்தைப் பாதுகாக்கும் திறன்  உள்ளவர்கள், முக லட்சணம் உள்ளவர்களாக இருப்பார்கள் போன்றவற்றை கூறலாம்.

கடகம் : காலச்சக்கரத்தின் நான்காவது ராசி கடகம். கட்டுமான துறையில் சிறந்து விலங்கி வருபவர்களாக இருப்பார்கள்,  அந்தரங்க வாழ்க்கை  வாழ்பவராக  இருப்பார்கள், அசையாச் சொத்துக்கள்  வைத்திருப்பவர்கள், மிகுந்த உறவினர்களோடு  இருப்பார்கள், உணர்வுப்பூர்வமாக சிந்திக்காமல் அறிவுப்பூர்வமாக சிந்தித்து  வாழ்பவராக இருப்பார்கள், உடல்  பருமன்  அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கன்னி : காலச்சக்கரத்தின்  ஆறாவது ராசி கன்னி. உழைப்பு உள்ளவர்களாக இருப்பார்கள், அடிமை வேலை செய்பவர்களாக இருப்பார்கள், பிறருக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள், தற்பெருமை உள்ளவர்களாக இருப்பார்கள், மற்றவர்களை வீழ்த்தி வெற்றி பெறுபவர்கள் ஆக இருப்பார்கள், தனிமையான வாழ்க்கை வருபவர்களாக இருப்பார்கள்.

விருச்சிகம் : காலச்சக்கரத்தின் எட்டாவது ராசி விருச்சிகம். எதிரிகளின் தொல்லை கொண்டவர்களாக இருப்பார்கள்  தெய்வ அனுக்கிரகம் இல்லாதவர்கள் இருப்பார்கள், எதையும் எளிதாக பெற  முடியாமல் கஷ்டப்பட்டு பயனின்றி பெறமுடியாமல் இருப்பார்கள்,  திறமைகள் வெளிப்படாமல் இருப்பவர்கள், தொழிலில் நஷ்டம் அடைபவர்கள், தன் நிலையை தாழ்த்தி கடுமையான உடல் உழைப்பு செய்பவர்கள், அதிகப்படியான கோபம்  கொண்டவர்களாக இருப்பார்கள்.

மகரம் : காலச்சக்கரத்தின் பத்தாவது ராசி மகரம். அதிகாரம் மிக்கவர்களாக இருப்பார்கள், அதிக சொத்து உடையவர்களாக இருப்பார்கள், எப்பொழுதுமே திருப்தியற்ற நிலையில் இருப்பார்கள், மிகப்பெரிய தலைமை பதவியில் இருப்பார்கள், தொழிலில் சாதனை படைத்தவர்களாக இருப்பார்கள்.

மீனம் : காலச்சக்கரத்தின் பன்னிரண்டாவது ராசி மீனம். ரகசிய சதி வேலை செய்பவர்களாக இருப்பார்கள், துப்பறியும் வேலைகளை செய்வார்கள், ரகசிய முதலீடுகள் செய்பவர்களாக இருப்பார்கள், வரவுக்கு மீறிய செலவுகளை செய்பவர்களாக இருப்பார்கள், வெளிநாட்டில் குடியுரிமை. பெறுவார்கள்.

ஆண் ராசி பெண் ராசி
Rasi kattam – ஆண் ராசி பெண் ராசி=

சரம் ஸ்திரம் உபயம் :

சரம் :  1,4,7,10 கேந்திர ராசிகள் , சரம் என்பது வளர்ந்துகொண்டே செல்லுதல்

மேஷம் :  சுய முயற்சியில் வெற்றி பெறுதல்,  ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்தல்

கடகம் :  வீடு மனை வாகனம் கல்வி   வளர்ச்சி உண்டு

துலாம் : திருமணம்  உறவு சமூக தொடர்பு  வளர்ந்து கொண்டே செல்லும்

மகரம்: தொழில் அந்தஸ்து   வளர்ச்சி இருக்கும்

ஸ்திரம் : 2,5,8,11 கேந்திர ராசிகள்,  ஸ்திரம் என்பது நிலையாக இருத்தல்

ரிஷபம் :  பேச்சு, பணம் நிலையாக இருக்கும்

சிம்மம் :  வாரிசு நிலையாக இருக்கும்

விருச்சிகம் : ஆயில்  மிக்கவராக இருப்பார்

கும்பம்: மனத்திருப்தி ஆசைகள் நிறைவேறுதல்

உபயம் : 3,6,9,12 கேந்திர ராசிகள், உபயம் என்பது மாறி மாறி கொண்டே செல்லுதல்

மிதுனம்: தகவல் தொடர்பு,  தைரியம்  மாறிக் கொண்டே  வரும்

கன்னி :  கடன், நோய், வேலை, நிலையாக இருக்காது

தனுசு :   தூர பிரயாணங்கள்  மாறி மாறி செல்வது

மீனம்: செலவுகள் முதலீடுகள் ஏற்றம் இறக்கம் இருக்கும்

சரம் ஸ்திரம் உபயம் ராசிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *