How to know 12th House in astrology tamil – KP system

லக்னத்திலிருந்து பன்னிரண்டாம் பாவம் : 12th Bhavam

12 ம் பாவத்தை விரைய ஸ்தானம், மறைவு ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.  12ஆம் பாவத்தைக் கொண்டு கீழ்கண்டவாறு குறிப்பிடலாம். 12th house astrology பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

பன்னிரண்டாம் பாவத்தில் உள்ள உடல் உறுப்புகள்:

பாதங்கள்

 உடலில் இருந்து வெளியேறும் கழிவுப் பொருட்கள்

வரைபடம் :

12th House in astrology tamil

மேற்கொண்ட வரைபடத்தில் ஜாதகரின் லக்னம் தனுசு ராசியில் விழுந்துள்ளது. தனுசு லக்னத்தில் இருந்து  பன்னிரண்டாவது ராசி   விருச்சகம். எனவே  கேபி ஜோதிடத்தின்படி விருச்சக ராசி என்பது   பன்னிரண்டாம் பாவமாகும். ஒவ்வொரு பாவத்திற்கும் தனித்தனி காரகத்துவங்கள் உள்ளன.

பன்னிரண்டாம் பாவத்தின் காரகங்கள் :

  • அனைத்து செயல்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரும்  மோட்ச ஸ்தானம்
  •  ரகசிய சதி வேலைகள்,  ரகசிய திட்டங்கள் , சதி ஆலோசனைகள் 
  • ரகசிய எதிரிகள், அரசியல் காரணங்களுக்காக செய்யப்படும் கொலைகள்
  •  புரியாத புதிர்கள், மறைமுகமாக இருக்கும் விஷயங்கள்,
  •  துப்பறியும் வேலைகள், ரகசிய முதலீடுகள்,
  •  உடல் உறுப்பு மற்றும் மூளை செயலிழந்து போகுதல்
  •  தாழ்வு மனப்பான்மை, தனிமையில் இருத்தல்,
  •  எதிலும் செயல்படாதீர்கள், தோல்வி, மறைந்து வாழ்தல்,
  • சமூக  கட்டுப்பாடுகளால்  தள்ளி வைக்கப்படுதல், 
  •  சிறைச்சாலைகள், அனாதை விடுதிகள்,
  •  எல்லாவித தடைகள், நஷ்டங்கள், வரவுக்கு மீறிய செலவுகள்
  •  அதிகமான வட்டியுடன் கூடிய கடனை திருப்பி செலுத்துதல்
  •  மறைமுக எதிரிகளை சமாளிக்க முடியாமல் திணறுதல்
  •  ரகசிய சிறையில் இருத்தல்,
  •  மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுதல்,
  •  எல்லா விதமான தண்டனைகள், அபராதங்கள்
  •  துறவு , இடமாற்றம்,  வெளிநாடு செல்லுதல்,
  •  முற்றிலும் புதிய சூழ்நிலையில்  வாழ்தல்,
  •  வெளிநாட்டில் குடியுரிமை பெறுதல், பணத்தை சொத்துக்கள் போன்றவற்றில் முதலீடு செய்தல்
  • தன் வேலையை மற்றவரிடம் தந்து விட்டு நிம்மதியாக  இருத்தல் 
  • இரண்டாவது தொழில் செய்தல், அடுத்தடுத்த கிளைகளை  தொடங்கி நிறுவுதல்,
  • எல்லா வேலைகளையும் முடித்து படுக்கைக்குச் செல்லுதல், உறக்கம்
  • புதியவற்றைக் கண்டுபிடித்தல், ரகசிய நபர்கள் தொடர்புகள், மோட்சம், பக்கவாதம்,   விரயங்கள்,
  • சி பி  சி ஐ டி,  ஒற்றர்கள், சிறையில் இருத்தல், உறுப்புகள் துண்டித்தல், ஊரை விட்டு துரத்துதல், துப்பறியும் வேலை பிரிவுகள்

போன்ற காரகங்களை அனைத்தும் நன்றாக அனுபவிக்க முடியும். பன்னிரண்டாம் பாவம் கெட்டுவிட்டால் ஜாதகரால் மேற்கொண்ட காரகங்களை அனுபவிக்க முடியாமல்  காரகங்கள் அனைத்தும் எதிர்மறையாக செயல்படும். 12th house astrology

1 to 12 பாவங்களின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *