How to know 11th House in astrology tamil – KP system
லக்னத்திலிருந்து பதினொன்றாம் பாவம் : 11th Bhavam
பதினொன்றாம் பாவத்தை லாப ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. பதினொன்றாம் பாவத்தைக் கொண்டு கீழ்கண்டவாறு குறிப்பிடலாம். 11th house astrology பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
பதினொன்றாம் பாவத்தில் உள்ள உடல் உறுப்புகள்:
முழங்கால்
மூட்டுகள்
உடலில் உள்ள வைட்டமின்கள், தாதுப் பொருட்கள்
வரைபடம் :

மேற்கொண்ட வரைபடத்தில் ஜாதகரின் லக்னம் தனுசு ராசியில் விழுந்துள்ளது. தனுசு லக்னத்தில் இருந்து 11வது ராசி துலாம். எனவே கேபி ஜோதிடத்தின்படி துலாம் ராசி என்பது பதினொன்றாம் பாவமாகும். ஒவ்வொரு பாவத்திற்கும் தனித்தனி காரகத்துவங்கள் உள்ளன.
பதினொன்றாம் பாவத்தின் காரகங்கள் :
- எளிதில் திருப்தி அடைந்தால், வெற்றி, மகிழ்ச்சி
- நிகர கையிருப்பு பணம், நிகர லாபம்
- எதிலும் முதலீடு செய்யாமல் பணமாகவே சேமித்து வைத்தல்
- புரியாத ரகசியங்களை கண்டறிந்து சித்தி பெறுதல்
- நலம் விரும்பிகள், மருமகன், மருமகள்
- நீண்டகால நண்பர்கள்
- ஆலோசகர்கள், ஆசைகள், எடுத்த காரியத்தில் வெற்றி
- நோய் குணமாக்குதல்
- லாபம் அதிஷ்டம் செலவுகள் குறைதல் சேமிப்பு
- எல்லாவற்றிலும் தடைகள் இன்றி முன்னேறுதல்
- ஒருவருக்கு கொடுத்த கடனை பெறுவது (அசல் வட்டியுடன் சேர்த்து)
- ஆசைகள் நிறைவேறுதல்
- நம்முடன் நெருங்கிப் பழகும் நீண்டகால நண்பர்கள், அபிலாசைகள்
- குறிக்கோள், வெற்றிகள், முகஸ்துதி செய்பவர்கள்
- சேமிக்கும் பழக்கவழக்கங்கள், முயற்சிகள் நிறைவேறுதல்
- நீடித்த நட்பு, ஒருமித்த கருத்து உடையவர்கள்
- குழு, சங்கம், கூட்டம், மாநாடு
- தந்தை வழி சித்தப்பா
- உச்ச நிலை கல்வி, முழு அறிவைப் பெறுதல்
- ஒரு துறையில் முழுமையாக பயின்று டாக்டர் பட்டம் பெறுதல்
- புத்தி கூர்மை, பாராளுமன்றம், சட்டமன்றம், நகராட்சிகள்
- வியாதி குணமடைதல், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புதல், உற்சாகம், உடல் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல்
- உடலில் தாங்கும் சக்தி, உடலுறுதி 11th house astrology
போன்ற காரகங்களை அனைத்தும் நன்றாக அனுபவிக்க முடியும். பதினொன்றாம் பாவம் கெட்டுவிட்டால் ஜாதகரால் மேற்கொண்ட காரகங்களை அனுபவிக்க முடியாமல் காரகங்கள் அனைத்தும் எதிர்மறையாக செயல்படும்.
1 to 12 பாவங்களின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.