How to Learn 10th House in astrology tamil – KP system
லக்னத்திலிருந்து பத்தாம் பாவம் : (10th Bhavam)
பத்தாம் பாவத்தை தொழில் ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது பத்தாம் பாவத்தை கொண்டு கீழ்கண்டவாறு கூறலாம். 10th house astrology பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
பத்தாம் பாவத்தில் உள்ள உடல் உறுப்புகள்:
தொடைப்பகுதி
கல்லீரல்
எப்போதும் ஒரு பொருளை உற்பத்தி செய்து கொண்டிருக்கும் பொறுப்புகள் கிட்னி, சிறுகுடல், பெருங்குடல்
வரைபடம் :

மேற்கொண்ட வரைபடத்தில் ஜாதகரின் லக்னம் தனுசு ராசியில் விழுந்துள்ளது. தனுசு லக்னத்தில் இருந்து பத்தாவது ராசி கன்னி. எனவே கேபி ஜோதிடத்தின்படி கன்னி ராசி என்பது பத்தாம் பாவமாகும். ஒவ்வொரு பாவத்திற்கும் தனித்தனி காரகத்துவங்கள் உள்ளன.
பத்தாம் பாவத்தின் காரகங்கள் :
- தொழில் மூலம் கிடைக்கும் பணம்
- சொத்து, அந்தஸ்து, அதிகாரம்
- பெரிய பதவி, ஜீவனம்
- தொழில் ரீதியாக கிடைக்கும் சமூக அந்தஸ்து
- நிர்வாகத்திறன், கடமை
- பெற்றோருக்கு கர்ம சடங்கு
- எதிலும் திருப்தியற்ற மனோநிலை
- அரசாங்கம் இடமிருந்து வெகுமதி
- வாழ்க்கை துணையின் சொத்து
- இளைய சகோதரருக்கு ஆபத்து
- மூத்த சகோதரருக்கு விரையும்
- சங்க கூட்டத்திற்கு தலைமை தாங்குதல்
- தத்து குழந்தை
- வாழ்க்கைத்துணையின் தாய், மாமியார் பற்றிய விவரங்கள்
- குழந்தையின் நோய் பற்றிய விவரங்கள்
- எப்போதும் ஒரு பொருளை உற்பத்தி செய்து கொண்டிருத்தல்,
- தொழிற்சாலை, தொழிலதிபர், தொழிலின் உதாரண புருஷர்கள்
- புகழ், நிரந்தர தொழில், கருமம்
- உயர் அதிகாரிகள், உலக பந்தங்களில் இருந்து விடுபடுதல்
- ஒருவருடைய முதல் தொழில்
- தலைமை பதவி உயர்வு
- வணிகம் அரசு சேவை
- தொழிலில் சாதனை படைப்பது 10th house astrology
போன்ற காரகங்களை அனைத்தும் நன்றாக அனுபவிக்க முடியும். பத்தாம் பாவம் கெட்டுவிட்டால் ஜாதகரால் மேற்கொண்ட காரகங்களை அனுபவிக்க முடியாமல் காரகங்கள் அனைத்தும் எதிர்மறையாக செயல்படும்.
1 to 12 பாவங்களின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.