How to Learn 8th House in astrology tamil – KP system
லக்னத்திலிருந்து எட்டாம் பாவம் : 8th Bhavam
எட்டாம் பாவம் என்பது ஆயுள் ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எட்டாம் பாவத்தை கொண்டு கீழ்கண்டவாறு காரகங்கள் குறிப்பிடலாம். 8th house astrology பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
எட்டாம் பாவத்தில் உள்ள உடல் உறுப்புகள் :
மர்ம உறுப்புகள்
வரைபடம் :

மேற்கொண்ட வரைபடத்தில் ஜாதகரின் லக்னம் தனுசு ராசியில் விழுந்துள்ளது. தனுசு லக்னத்தில் இருந்து எட்டாவது ராசி கடகம். எனவே கேபி ஜோதிடத்தின்படி கடக ராசி என்பது எட்டாம் பாவமாகும். ஒவ்வொரு பாவத்திற்கும் தனித்தனி காரகத்துவங்கள் உள்ளன.
எட்டாம் பாவத்தின் காரகங்கள் :
- ஆயில், வலி, வேதனை, துரோகம், துக்கம்
- துரதிஷ்டம், விபத்து, உடல் உறுப்புகள் சிதைதல்,
- கொலை, பொருட்கள் திருட்டுப் போகுதல், போராட்டம்,
- கொள்கை, எதிரிகளின் தொல்லை, எல்லாவித தடைகள், வீன் பலி
- தெய்வக்குற்றம், தெய்வத்தின் அனுகிரகம் கிடைக்காமல் போவது
- சிந்தனை அதர்ம வழியில் செல்வது, அவமானம், கெட்ட பெயர்,
- எதையும் எளிதாக பெற முடியாமல் போவது
- போராடியும் கிடைக்காமல் போவது
- முயற்சிகள் வீணாக்குதல் திறமைகள் உலகத்திற்கு தெரியாமல் முடக்குதல்
- கஷ்டப்படுதல், இன்சூரன்ஸ், உயில், வாரிசு, சீதனம், லஞ்சம்,
- இறந்தவரின் பணம், அறுவை சிகிச்சை, சக்திக்கு மீறின பெரும் கடன்,
- தன் நிலையை தாழ்த்தி கடுமையாக உழைத்தால்,
- ஒரே நேரத்தில் வரும் பலவித நோய்கள், நாட்பட்ட நோய்கள்,
- அதிக வலி வேதனைகளை தரும் நோய்கள்,
- சட்டவிரோதமாக கிடைக்கக்கூடிய பொருட்கள்,
- அதிகப்படியான கோபம்
- இளமையிலேயே தந்தையை இழத்தல்
- இயற்கை சீற்றங்கள், போர்
- ஜாதகர் கனவிலும் எதிர்பார்க்காத எதிர்பாராமல் நடைபெறும் எல்லாவித நன்மை
- தீமையான சம்பவங்கள்
- பிரச்சினைகளைக் கொடுக்கும் நபர்கள் 8th house in astrology
- கொடிய விலங்குகள், துரோகம், கருப்புப் பணம், மர்ம உறுப்புகளில் பிரச்சனை, நீச்ச நடவடிக்கை
- விதவை கோலம்
போன்ற காரகங்களை அனைத்தும் நன்றாக அனுபவிக்க முடியும். எட்டாம் பாவம் கெட்டுவிட்டால் ஜாதகரால் மேற்கொண்ட காரகங்களை அனுபவிக்க முடியாமல் காரகங்கள் அனைத்தும் எதிர்மறையாக செயல்படும். 8th house astrology
1 to 12 பாவங்களின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.