How to Learn 7th house in astrology tamil – KP system
லக்னத்தில் இருந்து ஏழாம் பாவம் : (7th Bhavam)
ஏழாம் பாவத்தை களஸ்திர காரகன் என்று அழைக்கப் படுகிறது. ஏழாம் பாவத்தை கொண்டு கீழ்கண்ட காரணங்கள் கூறப்படுகிறது 7th house astrology பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
ஏழாம் பாவத்தில் உள்ள உடல் உறுப்புகள்:
அடிவயிறு
உடலின் நடுப்பகுதி
தொப்புள்,
சிறுநீரகம்
கற்பப்பை
வரைபடம் :

வரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஜாதகரின் லக்னம் தனுசு. தனுசு லக்னத்தில் இருந்து ஏழாவது ராசி மிதுனம். எனவே இந்த ஜாதகருக்கு கே.பி ஜோதிடத்தின்படி மிதுனராசி என்பது ஏழாம் பாவமாகும். ஒவ்வொரு பாவத்திற்கும் தனித்தனி காரகத்துவங்கள் உள்ளன. ஏழாம் பாவத்தின் காரகத்துவங்கள் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழாம் பாவத்தின் காரகங்கள் :
- வாடிக்கையாளர்கள் பொதுஜன தொடர்பு, சமூக அங்கீகாரம்
- மற்றவர்களுடன் சகஜமாக பழக கூடியவர்
- இரண்டாவது குழந்தை
- பொருளாதார ரீதியில் பழகக்கூடியவர் மற்றவர்களால் ஜாதகர் ஏமாற்றப்படுவதும்
- துன்பங்களில் இருந்து விடுபடுதல்
- ஆயுளுக்கு ஆபத்து தரும் மாரக ஸ்தானம் ( திடீரென்று இறப்பது)
- விபத்துகள் நடைபெறாமல் இருத்தல்
- கணவன் அல்லது மனைவி
- இழந்த பொருட்களை மீட்பது
- மற்றவர்களுடன் நீண்டநாள் பழக்கவழக்கங்கள்
- எதிர்பாலின ஸ்பரிசு, சுக பரிமாற்றங்கள்,
- திருமண வாழ்க்கை, வாழ்க்கை துணை பற்றிய விவரங்கள்
- வியாபாரத்தில் பங்குதாரர்கள்
- வெளிப்படையான குணம் எதிலும் மற்றவரை இணைத்துக் கொள்ளுதல் மற்றவர்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல் பிறரை சார்ந்து இருத்தல்
- சமூகத்திற்கும் சட்டத்திற்கும் கட்டுப்பட்டு இருப்பது 7th house astrology
போன்ற காரகங்கள் அனைத்தும் நன்றாக அனுபவிக்க முடியும். ஏழாம் பாவம் கெட்டுவிட்டால் ஜாதகரால் மேற்கொண்ட காரகங்களை அனுபவிக்க முடியாமல் காரகங்கள் அனைத்தும் எதிர்மறையாக செயல்படும்.
1 to 12 பாவங்களின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.