How to Learn 6th house in astrology Tamil – KP system
லக்னத்திலிருந்து ஆறாம் பாவம் : (6th Bhavam)
ஆறாம் பாவம் என்பது சத்துரு ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. ஆறாம் பாவத்தை கொண்ட காரகங்களை கீழ்கண்டவாறு பார்க்கலாம். 6th house astrology பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
ஆறாம் பாவத்தில் உள்ள உடல் உறுப்புகள்:
வயிறு
இரைப்பை
கல்லீரல்
உடலிலுள்ள எல்லா வித நோய்களும் மற்றும் நோய்க்கிருமிகளையும் குறிக்கும்.
வரைபடம் :

மேற்கொண்ட வரைபடத்தில் ஜாதகரின் லக்னம் தனுசு ராசியில் விழுந்துள்ளது. தனுசு லக்னத்தில் இருந்து ஆறாவது ராசி ரிஷப ராசி ஆகும். எனவே கேபி ஜோதிடத்தின்படி டிசம்பர் ராசி என்பது ஆறாம் பாவமாகும். ஒவ்வொரு பாவத்திற்கும் தனித்தனி காரகத்துவங்கள் உள்ளன. ஆறாவது பாவத்தின் காரகத்துவங்கள் கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆறாம் பாவத்தின் காரகங்கள் :
- வழக்கு, கடன், நோய், உணவு
- வாடகை, உடல் உழைப்பு
- மருந்துகள், மருத்துவர்கள்,
- செல்லப்பிராணிகள், வீட்டு விலங்குகள்
- வேலைக்காரர்கள், அடிமைகள்
- ஜாதகருக்கு கட்டுப்படும் நபர்கள் ஜாதகர் வெற்றிகொள்ளும் நபர்கள்
- உடைகள் அணிகலன்கள்
- ஸ்பரிச சுகம் இல்லாதிருத்தல் அல்லது திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளுதல் அல்லது திருமணம் பந்தம் அமையாமல் போகுதல் அல்லது வாழ்க்கைத் துணை மீது ஆதிக்கம் செலுத்துதல்
- மற்றவரிடம் பணிபுரிதல், மாத சம்பளம், தொழிலாளர்கள்,
- பகைமை, கஞ்சத்தனம், பேராசை, ஆணவம், தற்பெருமை, மற்றவர் பொருளை அபகரித்தல்
- மற்றவர்களை தோல்வியுறச் செய்து வெற்றி பெறுதல்,
- தாயின் இளைய சகோதரர்( சித்தி அல்லது மாமா)
- ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்கள், சொத்துக்கள் மூலம் வாடகை மற்றவர் இடத்தில் தற்காலிகமாக இருந்து அதற்கு வருகை தருதல்
- எதையும் மற்றவர்களை விட சிறப்பாக செய்தல்,
- தற்காலிக பணவரவு அல்லது திரும்பக் கொடுக்கக் கூடிய பணம் சிறைச்சாலை , தனிமையான வாழ்க்கை, மற்றவரை உதாசீனப் படுத்துவதால் எதிரிகள் அதிகரித்தல்
போன்ற காரகங்களை அனைத்தும் நன்றாக அனுபவிக்க முடியும் . ஆறாம் பாவம் கெட்டுவிட்டால் ஜாதகரால் மேற்கொண்ட காரகங்களை அனுபவிக்க முடியாமல் காரகங்கள் அனைத்தும் எதிர்மறையாக செயல்படும். 6th house astrology
1 to 12 பாவங்களின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.