How to Learn 2nd House in astrology Tamil – KP system
லக்னத்திலிருந்து இரண்டாம் பாவம் : 2nd House in astrology Tamil
இரண்டாம் பாவம் என்பது ஒருவருடைய முகம், வாக்கு ஸ்தானம், குடும்ப ஸ்தானம் , தனம் ஸ்தானம் ஆகியவற்றைக் குறிக்கிறது. 2nd house astrology பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
லக்ன பாவம் என்பது ஜாதகரை மட்டும்தான் குறிக்கும். ஆனால் இரண்டாம் பாவம் என்பது ஜாதகத்தையும் ஜாதகரின் குடும்பம் உறுப்பினர்களையும் குறிக்கும். பொதுவாக கையிருப்பு பணத்திற்கு காரகன் சுக்கிரன் கிரகமாகும். அதேபோல் கையிருப்பு பணத்திற்கு இரண்டாம் பாவமும் முக்கியமானது. கிரகங்களில் பேச்சுக்கு காரகன் புதன் ஆகும். அதேபோல் பேச்சுக்கு காரகன் இரண்டாம் பாவம் என்று சொல்லப்படுகிறது. மேலும் ஒருவருடைய முகத்தோற்றத்தை குறிக்கும் பாவம் இரண்டாம் பாவமாகும். மேலும் ஒருவருடைய மேடைப்பேச்சு சிறந்து விளங்க வேண்டுமென்றால் இரண்டாம் பாவம் தொடர்புகள் நன்றாக இருக்க வேண்டும்.
3 ம் பாவம் என்பது பத்திரங்களை குறிக்கும் பாவமாகும். வீடு நிலம் வாகனம் போன்றவற்றுக்கு பத்திரங்களை பதிவு செய்தல் மிக அவசியமானது. ஆனால் இரண்டாம் பாவத்திற்கு பத்திரங்கள் ஏதும் தேவையில்லை. 2 ஆம் பாவம் 3-ஆம் பாவத்திற்கு 12 ஆம் பாவமாக வருவதால் அவ எதும் தேவை இல்லை.
2——————-> தொடர்புகள் (1,3,5,7,9,11)
3——————->தொடர்புகள் ( 2,4,6,8,10,12)
தொடர்புகளைப் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாக பார்க்கலாம்.
மேலும் வாழ்க்கை துணை மரணம், குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளுதல் போன்ற நிகழ்வுகள் தொடர்புகள் கெட்டிருந்தால் நடைபெறும். இதை ஆய்வு ஜாதகத்தின் மூலம் பார்க்கலாம்.
இரண்டாம் பாவத்தில் உள்ள உடல் உறுப்புகள்:
வாய்,
பல்,
நாக்கு,
கண்,
தொண்டை,
முகம்,
மூக்கு,
தாடை,
கண்ணம் போன்ற உறுப்புகளை குறிக்கும்.
வரைபடம் :

மேற்கொண்ட வரைபடத்தில் ஜாதகரின் லக்னம் தனுசு ராசியில் விழுந்துள்ளது. தனுசு லக்னத்தில் இருந்து இரண்டாவது ராசி மகர ராசி ஆகும். எனவே இந்த ஜாதகருக்கு கேபி ஜோதிடத்தின்படி மகர ராசி என்பது இரண்டாவது பாவமாகும். ஒவ்வொரு பாவத்திற்கும் தனித்தனி காரகத்துவங்கள் உள்ளன. இரண்டாவது பாவத்தின் காரகத்துவங்கள் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ஜாதகர் இரண்டாவது பாவத்தில் உள்ள காரகங்களை அனுபவிப்பார்.
இரண்டாம் பாவத்தின் காரகங்கள் :
- பேச்சுத்திறன்
- முக லட்சணம்
- பார்வைத்திறன்
- சுவையான உணவுகளை உட்கொள்ளும் அமைப்பு
- பணம் , பணம் வரும் வழி செல்லும் வழி
- எளிதில் பணமாக மாற்ற கூடிய பொருள்கள் ( தானியங்கள், உலோகங்கள், ரத்தினங்கள், நகைகள், தங்கம், வெள்ளி)
- உடலில் உற்பத்தியாகும் சக்தி
- ஒருவர் தன்னுடைய சொந்த கருத்துக்களை விளக்கும் தன்மை
- ஒருவர் தன்னுடைய செல்வத்தை அனுபவிக்கும் யோகம்
- குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள்
- பால கல்வி
- தாயின் மூத்த சகோதரம் (பெரியம்மா, மாமா)
- வாழ்க்கைத் துணையின் மரணம்
போன்ற காரகங்களை அனைத்தும் நன்றாக அனுபவிக்க முடியும் . இரண்டாம் பாவம் கெட்டுவிட்டால் ஜாதகரால் மேற்கொண்ட காரகங்களை அனுபவிக்க முடியாமல் காரகங்கள் அனைத்தும் எதிர்மறையாக செயல்படும். 2nd house astrology
1 to 12 பாவங்களின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.