How to Learn 4th house in kp astrology Tamil – KP system
லக்னத்திலிருந்து நான்காம் பாவம் : 4th house astrology
நான்காம் பாகம் என்பது ஒருவருடைய சுகஸ்தானம் மற்றும் தாய் ஸ்தானம் ஆகும். மேலும் நான்காம் பாவத்தை கொண்டு கீழ்கண்டவாறு கூறலாம். 4th house astrology பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
நான்காம் பாவத்தில் உள்ள உடல் உறுப்புகள்:
நுரையீரல்,
மார்பு பகுதி,
உடலில் உற்பத்தி செய்யும் உறுப்புகள்,
எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் உறுப்புகளான சிறுநீரகங்கள், இருதயம்
வரைபடம் :
4th house in astrology

மேற்கொண்ட வரைபடத்தில் ஜாதகரின் லக்னம் தனுசு. தனுசு லக்னத்தில் இருந்து நான்காவது ராசி மீனம். எனவே இந்த ஜாதகருக்கு கே.பி ஜோதிடத்தின்படி மீன ராசி என்பது நான்காம் பாவமாகும். நான்காம் பாகத்தின் காரகத்துவங்கள் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ஜாதகர் நான்காம் பாவத்தில் உள்ள காரகங்களை அனுபவிப்பார்.
நான்காம் பாவத்தின் காரகங்கள் :
- நுரையீரல், மார்பு பகுதி, உடலில் உற்பத்தி செய்யும் உறுப்புகள், எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் உறுப்புகளான சிறுநீரகங்கள் இருதயம் போன்றவை.
- தாய் தாய்வழிச் சொத்து
- அந்தரங்க வாழ்க்கை, ஆரம்பக்கல்வி, ஆரம்பக் கல்வி ஆசிரியர், பள்ளிகள், கல்லூரிகள்
- உயிரற்ற பொருட்களை உற்பத்தி செய்தல்,. உதாரணமாக செங்கல், ஜல்லி, கம்பிகள், சிமெண்ட், வாகனத்தின் உதிரி பாகங்கள் செய்தல்
- எளிதில் தூக்க முடியாது வீட்டு உபயோக பொருட்கள் பீரோ, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், நாற்காலி போன்றவைகள்
- உள்ளூர், இருப்பிடம், சொந்த நாடு, ஒரே இடத்தில் நிலையாக இருத்தல், வீடு, நிலம், வாகனம், அசையாச் சொத்துக்கள்
- கற்பு, உடல் சார்ந்த ஒழுக்கம், மலட்டுத் தன்மை அல்லது அலி தன்மை, உடல் பருமன்
- மனப்பாடம் செய்தல் எதையும் வர்ணனை செய்யாமல் இருப்பதை அப்படியே சொல்லுதல்
- மெருகு ஊட்டப்படாத மூலப்பொருட்கள் ஒப்பனை இல்லாத எளிமையான தோற்றம்
- நாத்திகம் பேசுபவர், எதையும் உணர்வுபூர்வமாக சிந்திக்காமல் அறிவுபூர்வமாக சந்தித்தல்
- யூகங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் , பாரபட்ச நடவடிக்கை புரட்சிகரமான சிந்தனைகள்
- தானமாக எதையும் பிறருக்குக் கொடுக்காமல் செல்வத்தை அதிகமாகப் பெருகுதல், ஒட்டு மொத்த பணத்தையும் அப்படியே வைத்திருப்பது, தேவைக்கு அதிகமாக கையிருப்பு பணம்
- இயந்திரத்தனமான வாழ்க்கை,
- ஜடப்பொருள் திடப்பொருள் தானிய வகைகள் பண்ணைகள் ஞாபகச் சின்னங்கள் புராதன பொருட்கள்
- ஒரே இடத்தில் நிலையாக இருக்கும் பொருட்கள் திருட்டு சொத்தை வைத்துள்ள இடம்
- மூதாதையர் சொத்துக்கள்
- கிணறு ஆறு ஏரி குளம் கல்லறை சுடுகாடு
- தேவையான விஷயங்கள், செயற்கை
- கட்டிட தொழில்கள், ரியல் எஸ்டேட், சிவில் இன்ஜினியர் மெக்கானிக்கல் இன்ஜினியர்
- கூட்டுக்குடும்பம் கூட்டுத்தொழில் சிக்கனம்
- வாகனம் வாகனம் சார்ந்த தொழில்கள் ஆட்டோ மொபைல்ஸ் சிறிய உற்பத்தி சார்ந்த தொழில்கள்
போன்ற காரகங்களை அனைத்தும் நன்றாக அனுபவிக்க முடியும். நான்காம் பாவம் கெட்டுவிட்டால் ஜாதகரால் மேற்கொண்ட காரகங்களை அனுபவிக்க முடியாது முடியாமல் காரகங்கள் அனைத்தும் எதிர்மறையாக செயல்படும். 4th house astrology
1 to 12 பாவங்களின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.