How to Learn 3rd House in astrology Tamil – KP system
லக்னத்திலிருந்து மூன்றாம் பாவம் : 3rd house astrology
மூன்றாம் பாவம் என்பது தைரிய ஸ்தானம், மனோபலம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றைக் குறிக்கும். 3rd house astrology
மூன்றாம் பாவத்தில் உள்ள உடல் உறுப்புகள்:
காது,
கைகள்,
தோல்பட்டை,
கழுத்தில் செல்லும் நரம்பு மண்டலங்கள்,
ரத்த நாளங்கள்
உணர்வு புலன்கள்.
வரைபடம் :

மேற்கொண்ட வரைபடத்தில் ஜாதகரின் லக்னம் தனுசு. தனுசு லக்னத்தில் இருந்து மூன்றாவது ராசி கும்ப ராசி. எனவே இந்த ஜாதகருக்கு கே.பி ஜோதிடத்தின்படி கும்ப ராசி என்பது மூன்றாவது பாவமாகும். ஒவ்வொரு பாவத்திற்கும் தனித்தனி காரகத்துவங்கள் உள்ளன. மூன்றாம் பாகத்தின் காரகத்துவங்கள் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ஜாதகர் மூன்றாம் பாவத்தில் உள்ள காரகங்களை அனுபவிப்பார்.
மூன்றாம் பாவத்தின் காரகங்கள் :
- இளைய சகோதரர்கள், இளைய சகோதரிகள், மாமனார்
- தந்தையின் சகோதரம், சகோதரி மற்றும் அவர்களின் குழந்தைகள்
- தகவல் பரிமாற்றங்கள்
- தைரியம், பயந்த சுவாசம்
- மனம், மனக்குழப்பம், மனநிலை பாதித்தல், பைத்தியம், மனநிலை மருத்துவர்
- ஞாபக சக்தி, ஞாபக மறதி
- உடல் மெலிதல், எதையும் சுருக்குதல்
- செய்திகள், ரேடியோ ,கைபேசி, தொலைபேசி, கணினி,
- சொத்துக்களை இழத்தல், விற்பனை செய்தல்
- இடமாற்றம், பக்கத்து ஊர், அண்டைய மாநிலம்
- தனிகுடித்தனம்
- வெளியூர், சிறிய தூர பயணம், போக்குவரத்து துறை
- கையெழுத்து, பத்திரிக்கை, விளம்பரம், நூலகம், அச்சு,
- வதந்திகள், பொய் சொல்லுதல்
- விற்பனை செய்தல், எளிமைப் படுத்துதல்
- ஒப்பந்தம், ஒப்பந்தத் தொழில்
- டெண்டர் வேலையை எடுத்து செய்தல்
- இடத்தையோ அல்லது தொழிலையோ லீசுக்கு எடுத்து செய்தல்
- தகவல் தொடர்பு சாதனங்கள், தொலைக்காட்சி
- தகவல் தொடர்பு சார்ந்த துறையில் வேலை பார்த்தால் (Soft ware Engineer)
போன்ற காரகங்களை அனைத்தும் நன்றாக அனுபவிக்க முடியும். நான்காம் பாவம் கெட்டுவிட்டால் ஜாதகரால் மேற்கொண்ட காரகங்களை அனுபவிக்க முடியாமல் காரகங்கள் அனைத்தும் எதிர்மறையாக செயல்படும். 3rd house astrology
1 to 12 பாவங்களின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.