How to Learn 1st house in astrology Tamil KP system – Lagna Bhavam
லக்ன பாவம் (ஒன்றாம் பாவம்) :
ஒருவருடைய ஜாதகத்தில் லக்ன பாவம் என்பது மிக முக்கியமானது. ஜாதகத்தில் லக்ன புள்ளி என்பது சூரிய உதயத்தின் மையமாக கொண்டு எந்த ராசியில் எந்த நட்சத்திரத்தில் எந்த டிகிரியில் விழுகிறதோ அதுவே ஒருவரின் லக்னமாகும். ஒருவரின் லக்ன புள்ளி எந்த டிகிரியில் விழுந்துள்ளது என்பதைப் பொறுத்தே மற்ற அனைத்து செயல்களையும் நிர்ணயிக்கப்படுகிறது. இதையே கேபி ஜோதிடத்தில் லக்ன பாவம் என்று அழைக்கப்படுகிறது. லக்ன பாவம் என்பது ஒரு தலைமை பாவம் என்று சொல்லப்படுகிறது. 1st house in astrology பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
லக்ன பாவத்தை கொண்டுதான் மற்ற 11 பாவங்கள் இயங்குகின்றது. உதாரணமாக லக்னம் பாவத்தில் தலை, மூளை போன்ற பாகங்கள் உள்ளது . ஒருவருடைய மூளை சரியாக இயங்கவில்லை என்றால் அவர் மூளை வளர்ச்சி குன்றியவர் என்று கூறப்படுகிறது. மூளை வளர்ச்சி இல்லாத ஒருவர் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாதவராகவும், சுகபோகங்களை அனுபவிக்க இயலாதவர்களும் இருப்பார். அதேபோலத்தான் லக்ன பாவம் கெட்டுவிட்டால் மற்ற 11 பாவங்களையும் செயல்படுத்த முடியாது. மேலும் லக்ன பாவத்தை முழுமையாக தெரிந்து கொள்ள அடுத்தடுத்த பதிவுகளில் தெரிந்துகொள்ளலாம்.
கேபி ஜோதிடத்தில் லக்ன பாவமே மிக வலிமையான பாவமாகும். லக்னம் பாவம் மற்ற பாவங்களின் செயல்பாடுகளை தன் கட்டுக்குள் வைத்திருக்கும். இலக்கண பாவத்தைக் கொண்டு ஒருவருடைய ஜாதகத்தில் தனித்திறமை கண்டறிய முடியும்.
வரைபடம் 1 :

வரைபடத்தில் தனுசு ராசியில் லக்ன புள்ளி விழுந்துள்ளது. இந்த ஜாதக கட்டத்தில் தனுசு ராசியை மையமாக கொண்டு மற்ற ராசிகள் இயங்கும். தனுசு ராசியை முதன்மையான ராசியாகவும் இதையே லக்ன பாவம் என்றும் குறிப்பிடுகிறோம்.
வரைபடம் 2 :

மேற்கண்ட வரைபடத்தில் லக்னம் என்பது எத்தனை டிகிரியில் உள்ளது என்பதை பிளாஸிடஸ் ( Placidus) என்ற கணக்கீடுகள் மூலம் கண்டறியப்படுகிறது. மேலும் இந்த வரைபடத்தில் லக்ன புள்ளியானது 17° 14’ 27” (டிகிரி மினிட்ஸ் செகண்ட்) என்ற விகிதத்தில் ஆரம்பமாகிறது. மேலும் லக்ன பாவம் என்பது மேற்கொண்டு வரைபடத்தில் தனுசு ராசியில் 17° 14’ 27” இருந்து மகர ராசியில் 19° 38′ 09″ வரை சொல்லப்படுகிறது. இதையே 1ஆம் பாவம் என்றும் லக்ன பாவம் என்றும் கூறப்படுகிறது. 1st house in kp astrology
உடல் உறுப்புகள்:
தலை
மூளை
நெற்றி
ஒருவருடைய உடல் உறுப்புகள் அனைத்தும் மூளையின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது. அதேபோலத்தான் மற்ற பாகங்களில் உள்ள உடல் உறுப்புகளையும் லக்னமே செயல்படுத்தும்.
கேபி ஜோதிடத்தில் லக்ன பாவத்தின் காரகங்கள் :
கீழ்கண்டவாறு லக்ன பாவத்தைக் கொண்டு ஒருவருடைய செயல்களை குறிப்பிடலாம்….
- தனித்தன்மை, தனித்திறமை, தலைமை பண்பு
- பொதுவான எண்ண ஓட்டங்கள்
- சுய முயற்சிகள்
- ஆரோக்கியம்
- நிர்வாகத்திறன்
- ஒரு துறையில் சாதனை படைக்கும் திறன்
- பணத்தைவிட கௌரவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தல்
- பணத்தை இழந்து கௌரவத்தை பெறுதல்
- நோய் எதிர்ப்புத்திறன்
- உயிர்
- கம்பீரமான தோற்றம்
போன்ற காரகங்களை அனுபவிக்க முடியும். லக்ன பாவம் கெட்டுவிட்டால் ஜாதகரால் மேற்கொண்ட காரகங்களை அனுபவிக்க முடியாது. house in astrology
1 to 12 பாவங்களின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது