How to Know sukiran in tamil astrology – KP system

சுக்கிரனின் கிரக காரகங்கள் : Sukiran kiragam

கே.பி ஜோதிடத்தில் ( kp astrology ) சுக்கிரனை  ஆண்களுக்கு களஸ்திர காரகன் என்று அழைக்கப்படுகிறது.  பெண்களுக்கு  வாழ்க்கையில் இடம்பெறும் இன்பத்திற்கு சுக்கிரன் காரகனாவார்.   ஒரு ஆண் தன் மனைவியை அல்லது காதலியை தான் மேற்கொண்ட கோணத்தில் ரசிக்க முடியும். தன் உடன் பிறந்த சகோதரியை ரசிக்க முடியாது. எனவே தான் ஆண்களுக்கு களத்திரகாரகன் சுக்கிரன் ஆவார். sukiran kiragam பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

சுக்கிரன் சூரியனுக்கு இரண்டாவது வட்ட பாதையில் சுற்றி வருகிறது. சூரியனிடமிருந்து சுமார் 10 கோடியே 76 லட்சத்து 80 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் சுக்கிரன் உள்ளது. சுக்கிரன் தன்னைத்தானே 23 மணி நேரம் 30 நிமிடத்தில் சுற்றிக் கொள்கிறது. சூரியனை ஒரு முறை சுற்றி வர சுக்கிரனுக்கு  225 நாட்கள் ஆகிறது. சுக்கிரன் விட்டம் 12,104 கிலோ மீட்டர் ஆகும்.

சூரிய குடும்பத்தில் உள்ள சுக்கிரனை தவிர மற்ற அனைத்து கோள்களும் இடது புறத்திலிருந்து வலது புறமாக  (மேற்கிலிருந்து கிழக்காக) தன்னைத்தானே சுற்றிக் கொண்டு வருகிறது. ஆனால் சுக்கிரன் மற்றும் விதிவிலக்காக வலமிருந்து இடமாக தன்னைத்தானே சுற்றி வருகிறது. எனவேதான் மற்ற எல்லா கிரகங்களின் காரகங்களை விட சுக்கிரனின்  காரகங்கள் வேறுபட்டு ஒரு போலியான  காரகங்களை  தனக்குள் வைத்துள்ளது.

sukiran in tamil astrology

சுக்கிரனின் காரகத்துவங்கள் : KP astrology in Tamil

  • சுக்கிரன் என்றாலே சிற்றின்ப விஷயங்களுக்கு காரகனாவார்.  சுக்கிரன் சூரிய ஒளியைப் பெற்று அது அழகாக பிரதிபலித்து மற்ற கிரகங்களை விட பிரகாசிக்க கூடியது. எனவே தான் அழகு, கவர்ச்சி, நளினம், மென்மை, காதல் போன்றவற்றுக்கு சுக்கிரனே காரகனாவார்.
  • ஆண்களைவிடப் பெண்கள் இடத்தில்தான் அழகு, கவர்ச்சி, மென்மை போன்றவை அதிகம் என்பதால் சுக்கிரனின் பெண்களை குறிக்கும் கிரகமாகும்.
  • சுக்கிரன் பாலின இன்பங்களுக்கு காரகர் என்பதால் ஆண் பெண் உறவுகளின் போது வெளிப்படுத்தும் விந்து,  சுரோணிதம்  இவற்றிற்கு சுக்ரனே காரகர் ஆவார்.
  • தனகாரகன், சொந்தப் பணம், கணக்கில் காட்டாத கருப்பு பணம், வட்டி தொழில் போன்றவை சுக்ரனின் காரகங்களாகும்.
  • ஆண் பெண் பாலின வேறுபாடுகளை ஒருவருடைய உடலில் உள்ள ஹார்மோன்கள் நிர்ணயிக்கும். எனவே ஹார்மோன்களும் சுக்ரனே காரகர் ஆவார்.
  • மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை, கள்ளத்தொடர்புகள், ஆடம்பரப் பொருள்கள், இன்பங்களை நுகருதல், மற்றவர்களை மயக்குதல், கலைஞர்கள், விபச்சாரிகள் போன்றவை சுக்ரனின் காரகங்களாகும்.
  • ஒப்பனை, ஆடை, அலங்காரங்கள், சொகுசு, மாளிகைகள், இயல், இசை, நாடகங்கள், நடனங்கள் போன்றவை சுக்ரனின் காரகங்களாகும்.
  • உறவு முறையில் மனைவி, உயர் ரக மதுபான வகைகள் போன்றவை சுக்ரனின் காரகங்களாகும்.
  • கண்ணம், இளம் பெண்கள், காதல், இல்லற உறவு, கலைநிகழ்ச்சி, பொழுதுபோக்கு, கேளிக்கை, எல்லாவித உடல் சுகங்கள், ஆடம்பரம் பகட்டு, உள்ளாசம், மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை, சொகுசு மாளிகைகள், வாகனங்கள் போன்றவை சுக்ரனின் காரகங்களாகும்.
  • வியாதிகளில் சர்க்கரை நோய், நீர் சம்பந்தமான நோய்கள் போன்றவை சுக்ரனின் காரகங்களாகும்.

Sukiran kiragam சுபதன்மை கொண்ட கிரகமாக கருதப்படுகிறது.

பாலினம்- பெண்

நிறம் – வெள்ளை

நவதானியம்-  மொச்சை

உலோகம்-  வெள்ளி

தெய்வம்- மகாலட்சுமி

கிரக ஸ்தானம்-  ஸ்ரீரங்கம்

சமித்து- அத்தி

புஷ்பம்-     வெந்தாமரை

சுவை-   புளிப்பு

நவரத்தினம்- வைரம்

நோய்- சிலேத்துமம்

திசை- தென்கிழக்கு

பஞ்சபூதம் – நீர்

ஆகியவையெல்லாம் சுக்கிரனின் காரகங்கள் ஆகும். sukran in tamil astrology


நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்களின் காரகத்துவங்கள்  லிங்க் (Link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


கே பி ஜோதிட முறையில் உதாரண ஜாதகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜாதகரின் முக்கியமான ஜாதக பலன்கள்

  1.  இந்த ஜாதகர் தனவான் ஆகும் யோகம் உள்ளது.

1 ஆம் பாவம் —- 2, 6,10,12 தொடர்புகள்

  1. ஜாதகத்தின்படி  ஜாதகர் காதல் திருமணம் செய்துள்ளார்

5 ஆம் பாவம் —- 1,3,5,7,9,11 தொடர்புகள்

  1.  ஜாதகரின் கல்வி நிலை போஸ்ட் கிராஜுவேட் படித்துள்ளார்

9 ஆம் பாவம் —- 2, 6,10,12 தொடர்புகள்

  1.  ஜாதகர் வெளிநாடு சென்று வேலை பார்த்து வந்துள்ளார்

9 ஆம் பாவம் —- 2, 6,10,12 தொடர்புகள்

  1. ஜாதகர் சாப்ட்வேர் கம்பெனியில்  சீனியர் லெவல்  மேனேஜராக வேலை பார்த்துள்ளார்.

புதன் திசையில்   ஜாதகர்  சாப்ட்வேர் (software senior manager)  வேலையில்  பணிபுரிந்துள்ளார். புதன் கிரகம்  என்பது   சாப்ட்வேரை குறிக்கும் கிரகமாகும்.

  1. ஜாதகருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

5 ஆம் பாவம் —- 1,3,5,7,9,11 தொடர்புகள்

மேலே குறிப்பிட்டுள்ள ஜாதகத்தின்படி அனைத்தும் பலன்களும் ஜாதகருக்கு பொருந்தும் படியாக உள்ளது.  மேலும் எதிர்காலத்தில் நடக்கப் போகின்ற பலன்களையும் துல்லியமாகக்  கே பி ஜோதிட  முறையில் கணிக்க முடியும்.

 இதுபோன்ற  உங்களுடைய ஜாதக பலன்களை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்  ஆன்லைன் மூலம் தொடர்பு கொள்ளவும். 

 மேலும்  கே பி ஜோதிட முறையில் ஜோதிடம் கற்க வேண்டுமென்றால்  தொடர்ந்து இந்த வெப்சைட்டை   படித்து வரவும்.

Sathish-Kumar