How to Know ragu kethu in KP astrology Tamil

கேதுவின் கிரக காரகங்கள் :

கே.பி ஜோதிடத்தில் கேதுவை  ஞானகாரகன் என்று அழைக்கிறோம். ராகுவைப் போல் கேதுவும் நிழல் கிரகம் ஆகும்.  தலைப்பகுதியை ராகுவாகும் வால் பகுதியை கேதுவாகும் கூறப்படுகிறது.  தன்னை பெரிதுபடுத்தி அகங்காரத்தை தருவது ராகு என்றால் தன்னை சிறுமைப்படுத்தி எல்லாம் அவன் செயலென்று தன்னார்வத்துடன் இருப்பது கேதுவின் காரணமாகும். Ragu kethu பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

  • ராகு எப்படி சனியைப் போன்று காரகங்களை கொண்டுள்ளது கேதுவும் செவ்வாய் போன்ற காரணங்களை கொண்டுள்ளது.  கேதுவின் தசா காலம் செவ்வாய் தசை  காலமும் ஒன்றுதான். (கேதுவின் தசா காலம் 7 வருடம் செவ்வாய் தசா காலம் 7 வருடம்)
  • கேதுவின் காரகங்கள் ராகுவின் காரணங்களை போன்ற இருந்தாலும்  சில விஷயங்களில் நேர்  எதிராக செயல்படும்.  அதாவது எதையும் பிரித்தெடுப்பது பிரமாண்ட படுத்துவது ராகு என்றால் கேதுவின் காரணம் என்பது  எதையும் சிறிதாக்குவது சிதைப்பது மற்றும் துடிப்பது போன்ற காரணங்களை கொண்டுள்ளது. 

  •  ராகுவும் கேதுவும் விஷத்தன்மை உள்ள போதை பொருட்களுக்கு காரணமாவார்.  போதை பொருட்களில் அபின் கஞ்சா போன்றவை காரணங்களாகும்.
  •  நாட்டை சீர்குலைப்பவர்கள், கலகக்காரர்கள், மிரட்டல் விடுபவர்கள், வெடிகுண்டு, பட்டாசு, அமிலம், எல்லாவித சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கும், எல்லாவித தண்டனைகளுக்கு  கேதுவே காரகர் ஆவார்.
  •  மலட்டுத்தன்மை, அலி தன்மை கொண்ட  கிரகமாக கருதப்படுகிறது.
  •  தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பது கேதுவின் காரணம் என்பதால் ரகசிய சதி வேலைகள், புலனாய்வு துறைகள் போன்றவற்றுக்கு காரகர் ஆவார்.
  • உறவில் தாய் வழி வம்சத்தில் தாத்தா, பாட்டி, உடலில் உள்ள அமிலம், சிறுகுடல், கண்டுபிடிக்க முடியாத நோய்கள் போன்றவை கேதுவின் காரகங்களாகும்.
  • மதநம்பிக்கை, தத்துவஞானம், மனோபலம், தனிமையில் இருத்தல், தவம், மருத்துவம், மௌன விரதம், பிரிவினை, எளிதில் கண்டுபிடிக்க முடியாத போலிகள், பில்லி, சூனியம், அந்தரங்கம், ஆவியுலகத் தொடர்பு போன்றவை அனைத்தும் கேதுவின் காரணங்களாகும்.

Rahu Kethu bhagavan in Tamil :

kethu bhagavan in tamil

 கேதுவை அசுப தன்மை கொண்ட கிரகமாக கருதப்படுகிறது.

பாலினம்- அலி

 நிறம் -பல வண்ணம்

 நவதானியம்-  கொள்ளு

 உலோகம்-  துருக்கல்

தெய்வம்- சித்திரகுப்தன்

கிரக ஸ்தானம்-  காளஹஸ்தி, திருநாகேஸ்வரம்

சமித்து- தர்ப்பை

புஷ்பம்-     செவ்வல்லி

சுவை-   புளிப்பு

நவரத்தினம்- வைடூரியம்

நோய்- பித்தம் 

திசை- தென்மேற்கு 

ஆகியவையெல்லாம் கேதுவின் காரகங்கள் ஆகும். ragu kethu

அடுத்ததாக சுக்கிரனின் காரகங்களை தெரிந்துகொள்ள கீழே  கொடுக்கப்பட்டுள்ள பட்டனை கிளிக் செய்யவும்.

நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்களின் காரகத்துவங்கள்  லிங்க் (Link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கே பி ஜோதிட முறையில் உதாரண ஜாதகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜாதகரின் முக்கியமான ஜாதக பலன்கள்

  1.  இந்த ஜாதகர் தனவான் ஆகும் யோகம் உள்ளது.

1 ஆம் பாவம் —- 2, 6,10,12 தொடர்புகள்

  1. ஜாதகத்தின்படி  ஜாதகர் காதல் திருமணம் செய்துள்ளார்

5 ஆம் பாவம் —- 1,3,5,7,9,11 தொடர்புகள்

  1.  ஜாதகரின் கல்வி நிலை போஸ்ட் கிராஜுவேட் படித்துள்ளார்

9 ஆம் பாவம் —- 2, 6,10,12 தொடர்புகள்

  1.  ஜாதகர் வெளிநாடு சென்று வேலை பார்த்து வந்துள்ளார்

9 ஆம் பாவம் —- 2, 6,10,12 தொடர்புகள்

  1. ஜாதகர் சாப்ட்வேர் கம்பெனியில்  சீனியர் லெவல்  மேனேஜராக வேலை பார்த்துள்ளார்.

புதன் திசையில்   ஜாதகர்  சாப்ட்வேர் (software senior manager)  வேலையில்  பணிபுரிந்துள்ளார். புதன் கிரகம்  என்பது   சாப்ட்வேரை குறிக்கும் கிரகமாகும்.

  1. ஜாதகருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

5 ஆம் பாவம் —- 1,3,5,7,9,11 தொடர்புகள்

மேலே குறிப்பிட்டுள்ள ஜாதகத்தின்படி அனைத்தும் பலன்களும் ஜாதகருக்கு பொருந்தும் படியாக உள்ளது.  மேலும் எதிர்காலத்தில் நடக்கப் போகின்ற பலன்களையும் துல்லியமாகக்  கே பி ஜோதிட  முறையில் கணிக்க முடியும்.

 இதுபோன்ற  உங்களுடைய ஜாதக பலன்களை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்  ஆன்லைன் மூலம் தொடர்பு கொள்ளவும். 

 மேலும்  கே பி ஜோதிட முறையில் ஜோதிடம் கற்க வேண்டுமென்றால்  தொடர்ந்து இந்த வெப்சைட்டை   படித்து வரவும்.

Sathish-Kumar