How to know mercury planet in tamil – KP astrology
புதனின் கிரக காரகங்கள் :
கே.பி ஜோதிடத்தில் புதன் கிரகத்தை புத்திர காரகன் என்றும் கல்வி காரகன் என்றும் புத்திக்கூர்மை காரகன் என்றும் அழைக்கப்படுகிறது. mercury planet in tamil பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
புதன் சூரியனுக்கு மிக அருகில் உள்ள முதல் கோளாகும். சூரியனிலிருந்து சுமார் 5 கோடி 78 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து சூரியனை சுற்றிவருகிறது. புதன் தன்னைத்தானே ஒரு முறை 59 நாட்களில் சுற்றிக் கொள்கிறது. சூரியனை 88 நாட்களில் சுற்றி வருகிறது. புதனின் விட்டம் 4879 கிலோமீட்டர் ஆகும். நாம் வாழும் பூமியில் இருந்து சுமார் 14 கோடியே 90 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் புதன் கிரகம் உள்ளது.
Mercury dasa in Tamil :
விம்சோத்தரி மகா திசை வருடங்கள் மொத்தம் 120. அதில் புதனின் தசா காலம் 17 வருடங்கள் ஆகும். கேபி முறையில் புதனின் தசா காலம் 17 வருடங்களை ஒன்பது பகுதிகளாக பிரிக்கப்பட்டு அதை புத்தி என்று அழைக்கப்படுகிறது. புத்தியை எவ்வாறு பிரிக்கப்பட்டது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விம்சோத்தரி முறைப்படி 9 திசை வருடங்களில் ஒரு திசையின் ஆரம்பம் எந்த திசையில் ஆரம்பிக்கிறதோ அதுவே ஆரம்பமாக புத்தியாக தொடரும். உதாரணமாக புதன் திசை என்பது புதன் புத்தியில் ஆரம்பிக்கிறது. இதை கீழ்கண்டவாறு புத்தியின் காலங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
புதன் திசை மற்றும் அதன் 9 புத்திகள் அட்டவணை :
கிரகங்கள் | தசை வருடங்கள் |
உப நட்சத்திர அளவு |
உப உப நட்சத்திர அளவு | புத்தி வருடங்கள் |
மாதங்கள் | நாட்கள் |
---|---|---|---|---|---|---|
புதன் | 17/120 | 1° 53′ 20” | 0° 16′ 3.33” | 2 | 4 | 26 |
கேது | 7/120 | 1° 53′ 20” | 0° 6′ 36.67” | 0 | 11 | 27 |
சுக்கிரன் | 20/120 | 1° 53′ 20” | 0° 18’53.33” | 2 | 10 | 0 |
சூரியன் | 6/120 | 1° 53′ 20” | 0° 5′ 40” | 0 | 10 | 7 |
சந்திரன் | 10/120 | 1° 53′ 20” | 0° 9′ 26.67” | 1 | 4 | 28 |
செவ்வாய் | 7/120 | 1° 53′ 20” | 0° 6′ 36.67” | 0 | 11 | 27 |
ராகு | 18/120 | 1° 53′ 20” | 0° 17′ 0” | 2 | 6 | 18 |
குரு | 16/120 | 1° 53′ 20” | 0° 15′ 6.67” | 2 | 3 | 6 |
சனி | 19/120 | 1° 53′ 20” | 0° 17’56.67” | 2 | 8 | 11 |

புதனின் கிரக காரகங்கள் : KP astrology in Tamil
- சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் மிக சிறிய கிரகம் புதன் ஆகும். சூரியனுக்கு அருகில் உள்ளதால் மற்ற கிரகங்களை விட சூரியனை விரைவாக சுற்றி வந்துவிடும். எனவே புதனை சுறுசுறுப்புக்கும் விரைந்து ஒரு செயலை முடிப்பதற்கும் புதனே காரகர் ஆவார்.
- விரைந்து ஒரு செயலை முடிப்பதற்கும், நல்ல புத்தி கூர்மைக்கும், சமயோசித சிந்தனைக்கும், சுறுசுறுப்பிற்கு, சமாதானத்திற்கும் நடுநிலைக்கும் புதனே காரகர் ஆவார்.
- குறிப்பாக கல்வியில் மிகவும் நுட்பமான கணிதம், புள்ளிவிவரம், விகடம் (காமெடி), கலை, கவிதை, காவியம், சிற்பம் போன்றவை புதன் ஆவார்.
- கல்விக்கு காரகன் புதன் என்பதால் அந்த கல்வியை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கும், கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கும் மேலும் விகடகவி ஆகியோருக்கும் புதனே காரகனாவார்.
- சிறப்பு கல்வி தகுதி பெற்றவர்களுக்கும், ஒரு விஷயத்தை சரியாக திட்டமிட்டு செய்பவர்களுக்கும், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவோர்களுக்கும் புதனே காரகனாவார். mercury dasa in tamil
- சூழ்நிலையை தனக்கு சாதகமாக உருவாக்கிக்கொள்ளும் எல்லா நபர்களுக்கும், வியாபாரிகளுக்கும், ஜோதிடர்களுக்கும், தூதுவர்களும், ஒரே சமயத்தில் பல செயல்களை செய்பவர்களுக்கும், தரகு வேலை செய்பவர்களுக்கும், புதுமையை விரும்பும் நபர்களுக்கும் புதனே காரகனாவார்.
- எழுத்து, செய்தி, பதிவு செய்தல், தகவல் தொடர்பு, விளம்பரம், அஞ்சல், தந்தி, தொலைபேசி, தொலைக்காட்சி, பத்திரிக்கை, கம்ப்யூட்டர், நூல்கள், தோட்டம், போக்குவரத்து போன்றவற்றுக்கு புதனே காரகர் ஆவார்.
- நரம்பு மண்டலங்களுக்கும், உணர்வு புலன்களுக்கும் புதனை காரகனாவார்.
- உறவு முறைகளில் மாமன் உறவுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் புதனை காரகனாவார்.
- சுறுசுறுப்பாக செயல்படும் இளைஞர்களுக்கும், குழந்தைப் பருவத்தில் உள்ளவர்களுக்கும் புதனே காரகர் ஆவார்.
- நல்ல அறிவாற்றல், மன்னிக்கும் தன்மை, சமயோசித ஞானம், மென்மையான குணம், வாக்கு, சாதுரியம், சங்கீதம், நடனம், எளிதாக புரிந்து கொள்ளும் தன்மை, புதிய கண்டுபிடிப்புகள், சாஸ்திர அறிவு போன்றவர்கள் போன்றவற்றிற்கு காரகனாவார்.
- உடல் உறுப்புகளில் கை, விரல்கள், நாக்கு போன்றவற்றுக்கு புதனே காரகனாவார்.
- ஒப்பந்தம் நிபுணர் இளவரசன், நுட்பமான ஆராய்ச்சி, சிந்திக்கத் தூண்டும் நகைச்சுவை, வளைந்து கொடுக்கும் தன்மை, இலக்கணப் புலமை போன்றவற்றுக்கு புதனே காரகனாவார்.
போன்ற காரகங்கள் அனைத்தும் புதனின் காரகங்கள் ஆகும். கிரகங்களின் புதனை சுபா கிரகமாக கருதப்படுகிறது.
பாலினம்- அலி
நிறம் – பச்சை
உலோகம்- பித்தளை
கிரக ஸ்தானம்- ஸ்ரீ சொக்கநாதர் மதுரை
தெய்வம்- மகாவிஷ்ணு
நவரத்தினம்-மரகதப் பச்சை
சுவை- உப்பு
நோய்- வாதம்
நவதானியம்- பச்சைப்பயிறு
திசை- வடக்கு
பஞ்சபூதம்-கார்ட்டூன்
சமித்து- நாயுருவி
புஷ்பம்- வென்கந்தம்
புதனின் காரகங்கள் அனைத்தையும் இந்தப் பதிவில் பார்த்தோம். அடுத்த பதிவில் கேதுவின் காரகங்களை பார்ப்போம். mercury planet in tamil
நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்களின் காரகத்துவங்கள் லிங்க் (Link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.