how to know nakshatra padam from date of birth
Natchathiram Padam in Tamil astrology :
ஒரு குழந்தை பிறக்கும்போது பிறக்கும் இடம், தேதி, நேரம் ஆகியவற்றைக் கொண்டு ஜாதக கட்டம் கணிக்கப்படும். ஜாதக கட்டத்தில் உள்ள சந்திரனின் நிலையை அறிந்து அது பயணம் செல்லும் ராசி, நட்சத்திரம் ஆகியவற்றை கணக்கிடபடும். மேலும் இவற்றைக் கொண்டு அது எந்த பாதத்தில் உள்ளது என்பதை கண்டுபிடிக்கப்படும். இவற்றை கீழ்க்கண்ட முறையில் பார்க்கலாம். how to know nakshatra padam from date of birth.
மேஷ ராசி என்பது காலச்சக்கரத்தின் முதல் ராசியாகும். மேஷ ராசியில் அஸ்வினி, பரணி, கார்த்திகை ஆகிய மூன்று நட்சத்திரங்களையும் , 9 பாதங்களையும் கொண்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மேஷ ராசியில் ஏப்ரல் 14 தேதி சூரியன் உதயமாகிறது. இதுவே தமிழ் மாதத்தில் சித்திரை ஒன்றாம் தேதி என்றும் தமிழ் வருட பிறப்பு என்றும் குறிப்பிடப்படுகிறது.
சூரியன் தொடர்ந்து மேஷ ராசியில் ஒருமாத காலம் உதயமாகிறது. அடுத்ததாக ரிஷப ராசியில் ஒரு மாத காலமும் அடுத்தடுத்த ராசிகளில் ஒவ்வொரு மாதமும் உதயமாகிறது. இவ்வாறு சூரியன் 12 ராசிகளையும் 12 மாதங்களைக் கொண்டு சுற்றி வருகிறது.
இதை கீழே அட்டவணையில் விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மாத ராசி அட்டவணை :
வீடு | ராசி | தமிழ் மாதங்கள் |
---|---|---|
1 | மேஷம் | சித்திரை |
2 | ரிஷபம் | வைகாசி |
3 | மிதுனம் | ஆணி |
4 | கடகம் | ஆடி |
5 | சிம்மம் | ஆவணி |
6 | கன்னி | புரட்டாசி |
7 | துலாம் | ஐப்பசி |
8 | விருச்சகம் | கார்த்திகை |
9 | தனுசு | மார்கழி |
10 | மகரம் | தை |
11 | கும்பம் | மாசி |
12 | மீனம் | பங்குனி |
பாரம்பரிய ஜோதிட முறையில் முறையில் சூரியன் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் மேலே குறிப்பிட்டுள்ள ராசியின் அடிப்படையில் உதயமாகிறது. இது ஒரு தோராயமான கணக்கு மட்டுமே. ஏனெனில் அயனாம்ச முறைப்படி பார்க்கும்பொழுது இது மாறுபடும்.
Jathagam parpathu eppadi in tamil :
மேஷ ராசி மற்றும் நட்சத்திர பாதங்கள் :
உதாரணமாக மேஷ ராசியை எடுத்துக்கொள்வோம். மேஷ ராசியையும் மற்றும் அதன் நட்சத்திர பாதங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. how to know nakshatra padam from date of birth

ராசி மண்டலத்தில் மேஷ ராசி 30 டிகிரி அளவை கொண்டது. இதில் அஸ்வினி, பரணி, கார்த்திகை ஆகிய மூன்று நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரமும் 13 டிகிரி 20 மினிட் அளவை கொண்டது. இதில் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் நான்கு பாதங்களாக பிரிக்கப்படுகிறது. அவை ஒவ்வொன்றும் 3 ͒ – 20’ (டிகிரி- மினிட்) என்ற அளவை கொண்டுள்ளது.
உதாரணமாக பரணி நட்சத்திரத்தை வரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பரணி நட்சத்திரமும் அதன் நான்கு பாதங்களையும் எவ்வாறு பிரிக்கப்பட்டது என்பதை வரைபடத்தின் மூலம் காணலாம். (Tamil astrology)

மேற்கண்ட இந்த பதிவில் நட்சத்திர பாதத்தை பற்றி தெரிந்துகொண்டோம்.
மேலும் நட்சத்திர பாதத்தின் விவரங்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்களின் காரகத்துவங்கள் லிங்க் (Link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.