How to find rasi and nakshatra by date of birth in tamil astrology

JANMA RASI JANMA NATCHATHIRAM IN KP ASTROLOGY :

கேபி ஜோதிட முறையில் ஜென்ம ராசி, ஜென்ம நட்சத்திரம் கணித்தலை மிகத்துல்லியமான முறையில்  சந்திரனின் நகர்வுகளை டிகிரி வாரியாக  கணிக்கப்படுகிறது. பூமியைச் சுற்றிவரும் சந்திரனின் நகர்வுகளை ஒவ்வொரு நிமிடத்திற்கும் எவ்வளவு டிகிரி  வித்தியாசப்படுகிறது என்பதை கணக்கீடுகள் (Mathematics formula) மூலம் கணக்கிட்டு  கணக்கிடப்படுகிறது. find rasi and nakshatra by date of birth in tamil

ராசி மண்டலத்தில் உள்ள 360  டிகிரியை 30  டிகிரி என்ற விகிதத்தில் 12 ராசியாக பிரிக்கப்படுகிறது.  அவ்வாறு ஒவ்வொரு நட்சத்திரத்தையும் 13  டிகிரி 20 நிமிடங்களை  கொண்டு  27 நட்சத்திரங்கள் உள்ளன. மேலும் ஒவ்வொரு நட்சத்திரத்தையும்  9 பிரிவுகளாக   விம்சோத்தரி மகா திசை 120  வருடங்கள் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது.

உதாரணமாக ஒரு குழந்தை பிறக்கும்போது தேதி, இடம், நேரம் ஆகியவற்றை கொண்டு சந்திரனின் நகர்வுகளை கணக்கிடப்படுகிறது.  இவ்வாறு கணக்கிடும்போது துள்ளியமாக  ரிஷப ராசியில் 16 டிகிரி 03 மினிட் 56 செகண்ட் உள்ளதாக கணக்கீடுகள்  மற்றும் கருவிகள் (software) மூலம்  கணக்கிட முடியும்.

கீழ்க்கண்ட வரைபடத்தின் மூலம் ஜென்ம ராசி ஜென்ம நட்சத்திரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

KP ASTROLOGY JANMA RASI JANMA NATCHATHIRAM

ரிஷப ராசியில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் பாதங்கள் :

கிருத்திகை நட்சத்திரம் 2,3,4 = 3 ͒ 20’ +3 ͒  20’+3 ͒  20’ = 10 ͒  00’

ரோகிணி நட்சத்திரம் 1,2,3,4 = 3 ͒ 20’ +3 ͒ 20’+3 ͒  20’+ 3 ͒ 20’ = 13 ͒  20’   

மிருகசீரிஷம் நட்சத்திரம் 1,2 = 3 ͒  20’ +3 ͒  20’  =  6 ͒  40’

5 கிருத்திகை 2,3,4 (10 ͒ 00’)  –   உப நட்சத்திரம், உப உப நட்சத்திரம், உப உப உப நட்சத்திரம்

6 ரோகிணி 1,2,3,4  (13 ͒ 20’)  – உப நட்சத்திரம், உப உப நட்சத்திரம் உப உப உப நட்சத்திரம்

7 மிருகசீரிஷம் 1,2 (6 ͒ 40’) – உப நட்சத்திரம், உப உப நட்சத்திரம், உப உப உப நட்சத்திரம்

மேற்கண்ட வரைபடத்தில் உள்ளவாறு சந்திரன் ரிஷப ராசியில் 16 டிகிரி 03 மினிட் 56 செகண்ட் உள்ளதால் ரோகிணி  நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் வருகிறது. சந்திரனின் நகர்வுகளை 360 டிகிரியில் எந்த டிகிரியில் பயணம் செல்கிறது என்பதை  ஒவ்வொரு நிமிடமும் கணக்கீடுகள் (Mathematics formula) மற்றும் software களில் மூலம் அறியமுடியும். இவ்வாறாக கேபி முறையில் மிகத்துல்லியமாக  ஜென்ம ராசி, ஜென்ம நட்சத்திரம் கணக்கிடப்படுகிறது. today natchathiram rasi in tamil

Jathagam parpathu eppadi in tamil :

கேபி முறையில் நட்சத்திரத்தை ஒன்பது பிரிவுகளாக பிரித்து எடுக்கும் முறை :

சந்திரனின் நகர்வுகளை கே எஸ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்  எந்த ராசியில் எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அதை புதிய  கணக்கீடுகள் (mathematics formula) மூலம்  ஒவ்வொரு நட்சத்திரத்தையும் ஒன்பது பிரிவுகளாக  பிரித்தெடுத்தார்.  உதாரணமாக அஸ்வினி நட்சத்திரத்தை  மேற்கொண்ட நட்சத்திர முறையில் ஒன்பது பகுதிகளாக  பிரிக்கப்படுகிறது. அதில் வரும்  ஆரம்ப திசை – புத்தி – அந்தரம் – சூட்சமம் ஆகியவை மிகத்துல்லியமான முறையில் கணக்கிடப்படுகிறது. find rasi and nakshatra by date of birth in tamil

ஒவ்வொரு நட்சத்திரத்தையும் ஒன்பது  பிரிவுகளாக எவ்வாறு பிரிக்கப்பட்டது என்பதை  கீழே வரைபடத்தில் விவரமாக  கொடுக்கப்பட்டுள்ளது. கேபி முறையில் நட்சத்திரத்தை  கீழ்க்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளது.

JANMA RASI - JANMA NATCHATHIRAM

KP ASTROLOGY STAR LORD METHODS :

1 நட்சத்திரம் (Star Lord) –   தசை

2 உப நட்சத்திரம் ( Sub Lord) – புத்தி

3 உப உப நட்சத்திரம் (Sub Sub lord) – அந்தரம்

4 உப உப உப நட்சத்திரம் (Sub Sub Sub lord) – சூட்சமம்

உப உப உப நட்சத்திரம் (Sub Sub Sub sub lord) – பிரானா

Note : நட்சத்திரங்களின் உட்பிரிவுகளை  ஒன்பது பிரிவுகளாக எவ்வாறு பிரிக்கப்பட்டது என்பதை வேறு பதிவுகளில் பார்க்கலாம்.

பாரம்பரிய ஜோதிட முறையில் ஜென்ம ராசி, ஜென்ம நட்சத்திரம்  கணிக்கும் முறையை தெரிந்துகொள்ள கீழே உள்ள  பட்டனை கிளிக் செய்யவும்.


நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்களின் காரகத்துவங்கள்  லிங்க் (Link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *