How to know sani thisai palangal in tamil KP astrology

சனி கிரகத்தின் – கிரக காரகங்கள் :

கே.பி ஜோதிடத்தில் (KP astrology) சனியை தொழில் காரகன் என்றும் ஆயுள் காரகன் என்றும் மந்த காரகன் என்றும் அழைக்கப்படுகிறது.  தொழில் என்றால் கடின உடல் உழைப்பு,  வேலைக்காரர்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே ஒரு தொழிலை சிறப்பாக நடத்த முடியும் என்பதால் சனியை தொழில் காரகன் என்று அழைக்கப் படுகிறது. மனிதனின் உடலைவிட்டு உயிர் பிரியும் காலத்தை சனியே  தாமதபடுத்துவதால் சனியை ஆயுள்காரகன் என்று குறிப்பிடப்படுகிறது. சூரியனுக்கு மிக தொலைவில் உள்ள கிரகம் சனி ஆகும். எனவே  சனி கிரகம் மற்ற கிரகங்களை விட சூரியனை ஒரு முறைச சுற்றி வர அதிக வருடங்கள் எடுத்துக் கொள்கிறது. எனவே எந்த ஒரு செயலையும் காலதாமதம் செய்வதற்கு காரணமான சனி மந்த காரகன் என்று அழைக்கப் படுகிறது. sani thisai palangal in tamil

சூரியனுக்கு ஆறாவது வட்டப் பாதையில் உள்ள கிரகம்தான் சனி கிரகம். சூரியனுக்கும்  சனி கிரகத்திற்கும் இடையே உள்ள தொலைவு 149 கோடியே 4  லட்சம்  கிலோமீட்டர் ஆகும். சனி கிரகம் தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள 10  மணி 40 நிமிடம்  எடுத்துக்கொள்கிறது. சனியின் விட்டம் 116,460 கிலோ மீட்டர்  அளவைக் கொண்டது. சூரிய ஒளியானது சனி கிரகத்திற்கு சற்றுக் குறைவாக தான் செல்கிறது. எனவே சனியை (Saturn) இருள் கிரகம் என்று அழைக்கப்படுகிறது.

sani dasa puthi palangal in tamil

சனியின் கிரக காரகங்கள் – KP astrology in Tamil :

  • மந்தமாக செயல்படும் சோம்பேறிகளும்,  உடல்ஊனமுற்றோருக்கு,  வயதானவர்களுக்கும், வயதான தோற்றமுடைய நபர்களுக்கும் சனி காரகர் ஆவார்
  • இருட்டு என்பது கரிய நிறம் என்பதால் கருப்பு நிறத்திற்கு காரகன் சனி ஆகும்.
  • சனி காலதாமதத்திற்கு காரகர் என்பதால் வாழ்க்கையில் எந்தவித மாற்றங்களையும், விரைவில் உண்டாகாமல் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரே மாதிரியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கும், சமுதாயத்தில் அனைவருக்கும் தெரியாத அடித்தட்டு மக்களுக்கும்  சனி காரகர் ஆவார்.
  • மற்றவர்களுக்கு கீழ்ப்படிந்து நடப்பது, தயக்க குணம், தாழ்வுமனப்பான்மை, மனச்சோர்வு, விடாமுயற்சி, விவேகம், நிதானம், மந்ததனம், அழுக்கு நிறைந்த பகுதிகளில் வசிப்பது, மற்றவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்துவது, ஏழ்மை கடின உழைப்பு போன்றவற்றுக்கு சனி காரகர் ஆவார்.
  • தாழ்ந்த ஜாதி, அடிமைகள், கடைநிலை ஊழியர்கள், வேலைக்காரர்கள், அதிகாரமில்லாத சீருடை அணிந்து வேலை செய்யும் கீழ்நிலை ஊழியர்களுக்கும் சனியே காரகர் ஆவார்.
  • வறுமையிலும் பசி இன்மையாலும் செய்யும் திருட்டு, ஏமாற்றுதல், கஞ்சத்தனம், பொய் சொல்லுதல் போன்றவற்றிற்கு சனி காரகர் ஆவார்.
  • உலோகங்களில் கருப்பு நிறம் கொண்ட தொழிலுக்கு அதிகமாக பயன்படுத்தும் மூலப்பொருளான இரும்பு (iron material) ஆகியவற்றிற்கு சனியே காரகர் ஆவார்.
  • வலி, வேதனை, அவமானம்,  அசிங்கம்,   துக்கம்,  துக்க நிகழ்வுக்கும்,  கருப்பு நிற ஆடைக்கும் சனியை காரகர் ஆவார்.
  • உடல் பகுதியில் வியர்வை மூலம்  கழிவுகளை வெளியேற்றும் தோலுக்கும், கரிய நிறமான முடிக்கும் (Hair), பாதத்திற்கும், உடலில் கழிவுப் பொருள்களை வெளியேற்றும்  சிறுநீரகத்திற்கும், வாய்வு நோய்கள் போன்றவற்றுக்கு சனியே காரகர் ஆவார்.
  • ஆண் பெண் இரு பாலருக்கும் ஏற்படும் மலட்டுத்தன்மைக்கு சனியை காரகர் ஆவார்.
  •  கம்பளி ஆடை, பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்றவை சனியே காரகர் ஆவார்.
  • சில்லரை வியாபாரம், வறுமை, ஏமாற்றுதல், ஏக்கம், அமைதியான வீட்டு விலங்குகள், பொய், இரவு வேலை  போன்றவற்றிற்கு சனி காரகர் ஆவார். sani thisai palangal in tamil

போன்ற  காரகங்கள் அனைத்தும் சனியின் காரகங்கள் ஆகும்.  கிரகங்களின்  சனியை அசுப கிரகமாக கருதப்படுகிறது.

பாலினம்-  அலி

நிறம் -கருப்பு

உலோகம்-  இரும்பு

 கிரக ஸ்தானம்- திருநள்ளாறு

தெய்வம்-  எமன்

நவரத்தினம் – நீலக்கல்

சுவை-  கசப்பு

நோய்- வாதம் 

நவதானியம்-  எள்ளு 

திசை- மேற்கு 

பஞ்சபூதம்-ஆகாயம் 

சமித்து- வன்னி 

புஷ்பம்-  கருங்குவளை

சனியின் காரகங்கள் அனைத்தையும் இந்தப் பதிவில் பார்த்தோம்.  அடுத்த பதிவில்  புதனின் காரகங்களை பார்ப்போம்.

Jathagam parpathu eppadi in tamil :


நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்களின் காரகத்துவங்கள்  லிங்க் (Link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.