How to know guru in astrology palangal kp astrology Tamil
குருவின் கிரக காரகங்கள் :
கே.பி ஜோதிடத்தில் (kp astrology) குருவை தன காரகன் என்றும் புத்திர காரகன் என்றும் அழைக்கப்படுகிறது. பெரிய அளவில் சிறிது கூட யோசிக்காமல் தான தர்மங்கள் செய்யும் தனவான்களை தனகாரகன் என்று அழைக்கப்படுகிறது. மனதில் எந்தவித சூது, வஞ்சகம், துரோகம் போன்றவை எதுவும் இல்லாததாலும் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதாலும் குருவை புத்திரகாரகன் என்று அழைக்கிறோம். மேலும் இதை குரு பகவான் என்று அழைக்கப்படுகிறது.சூரியனின் வட்டப் பாதையில் ஐந்தாவது கிராமமாக சுற்றி வருவதுதான் குரு கிரகம். சூரியனுக்கும் குருவுக்கும் இடையே உள்ள தொலைவு 76 கோடியே 93 லட்சம் கிலோமீட்டர் தொலைவு ஆகும். குரு தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள 9 மணி 55 நிமிடங்கள் ஆகின்றது. மேலும் சூரியனை ஒருமுறை சுற்றிவர 12 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. குருவின் விட்டம் 139,820 கிலோமீட்டர் அளவைக் கொண்டது. சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கிரகம் குரு (Jupiter planet )கிரகமாகும் guru in astrology

குருவின் கிரக காரகங்கள் : Kp astrology in tamil
- ஒருவர் மற்றவர்களால் மதிக்கக்கூடிய வணங்கக்கூடிய பெரிய மனிதனுக்குகுருவே குருவே காரணமாவார்.
- குரு என்றால் ஆசிரியர் என்று பொருள். அதன் அடிப்படையில் ஆசிரியர்களுக்கும், மதவாதிகளுக்கு, ஆன்மீக வாதிகளுக்கும், தெய்வீக பணி செய்பவர்களுக்கும், ஞானிகளுக்கும் குரு காரகர் ஆவார்.
- உயர்ந்த குணநலங்கள் கொண்ட சாந்தம், பண்பாடு, நீதி, நேர்மை, உண்மை, தர்ம சிந்தனை, பிறருக்கு நல்ல ஆலோசனை தருதல், மற்றவரை மதித்தல், தெய்வ நம்பிக்கை, ஒழுக்கம், கண்ணியம், கட்டுப்பாடு போன்ற குணங்களுக்கு குரு காரகர் ஆவார்.
- தான தர்மங்களுக்கு குரு காரகர் ஆவார்.
- பொதுப் பணம், தனிப்பட்ட நபருக்கு சொந்தமில்லாத பெரிய அளவிலான பணம், அரசாங்க கருவூலகம் (கஜானா), வங்கிகளில் உள்ள பணம், தான தருமங்கள் செய்யும் பெரிய தனவான்கள் போன்றவை குரு காரகனாவார்.
- குரு நேர்மைக்கு காரகன் என்பதால் சட்ட ஒழுங்கு, நீதி மன்றம், நீதிபதிகள், நேர்மையான சட்ட நடவடிக்கைகள் போன்றவைக்கு குரு காரகர் ஆவார்.
- மக்கள் பயன்பாட்டில் பெரிய மதிப்பில் மஞ்சள் நிறத்தில் உள்ள விலை உயர்ந்த தங்கத்திற்கு காரகன் குரு ஆவார்.
- நவகிரகங்களில் முழு சுப கிரகம் குரு கிரகமாகும். guru in astrology
- உடலில் உள்ள அதிக பகுதியை கொண்ட வயிற்றுப் பகுதிக்கும், வயிற்றிலுள்ள கல்லீரலுக்கும், உடலை பருமனாக செய்யும் கொழுப்பு சக்திக்கும், பெண்களின் கர்ப்பப்பைக்கும் குரு காரகர் ஆவார்.
- தெய்வ அனுகிரகதிருக்கும், தெய்வீக விஷயங்களுக்கும், எல்லாவித சுப நிகழ்ச்சிகளுக்கும், சுப நிகழ்ச்சிகளில் பயன்படுத்தும் மஞ்சள் நிறத்திற்கும் விலங்குகளில் மிகப் பெரிய உருவத்தைக் கொண்ட யானைகளுக்கும் குரு காரகர் ஆவார்.
போன்ற காரகங்கள் அனைத்தும் குருவின் காரகங்கள் ஆகும். கிரகங்களின் குருவை சுபா கிரகமாக கருதப்படுகிறது.
பாலினம்- ஆண்
நிறம் -மஞ்சள்
உலோகம்- தங்கம்
கிரக ஸ்தானம்- திருச்செந்தூர் ஆலங்குடி
தெய்வம்- தர்ஷனா மூர்த்தி
நவரத்தினம்-புஷ்ப ஹாரம்
சுவை- தித்திப்பு
நோய்- வாதம்
நவதானியம்- கொண்டைக்கடலை
திசை- வடகிழக்கு
பஞ்சபூதம்-நிலம்
சமித்து- அரசு
புஷ்பம்- முல்லை
குருவின் காரகங்கள் அனைத்தையும் இந்தப் பதிவில் பார்த்தோம். அடுத்த பதிவில் சனியின் காரகங்களை பார்ப்போம்.
How to create jathagam kattam :
நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்களின் காரகத்துவங்கள் லிங்க் (Link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கே பி ஜோதிட முறையில் உதாரண ஜாதகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஜாதகரின் முக்கியமான ஜாதக பலன்கள்
- இந்த ஜாதகர் தனவான் ஆகும் யோகம் உள்ளது.
1 ஆம் பாவம் —- 2, 6,10,12 தொடர்புகள்
- ஜாதகத்தின்படி ஜாதகர் காதல் திருமணம் செய்துள்ளார்
5 ஆம் பாவம் —- 1,3,5,7,9,11 தொடர்புகள்
- ஜாதகரின் கல்வி நிலை போஸ்ட் கிராஜுவேட் படித்துள்ளார்
9 ஆம் பாவம் —- 2, 6,10,12 தொடர்புகள்
- ஜாதகர் வெளிநாடு சென்று வேலை பார்த்து வந்துள்ளார்
9 ஆம் பாவம் —- 2, 6,10,12 தொடர்புகள்
- ஜாதகர் சாப்ட்வேர் கம்பெனியில் சீனியர் லெவல் மேனேஜராக வேலை பார்த்துள்ளார்.
புதன் திசையில் ஜாதகர் சாப்ட்வேர் (software senior manager) வேலையில் பணிபுரிந்துள்ளார். புதன் கிரகம் என்பது சாப்ட்வேரை குறிக்கும் கிரகமாகும்.
- ஜாதகருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
5 ஆம் பாவம் —- 1,3,5,7,9,11 தொடர்புகள்
மேலே குறிப்பிட்டுள்ள ஜாதகத்தின்படி அனைத்தும் பலன்களும் ஜாதகருக்கு பொருந்தும் படியாக உள்ளது. மேலும் எதிர்காலத்தில் நடக்கப் போகின்ற பலன்களையும் துல்லியமாகக் கே பி ஜோதிட முறையில் கணிக்க முடியும்.
இதுபோன்ற உங்களுடைய ஜாதக பலன்களை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் ஆன்லைன் மூலம் தொடர்பு கொள்ளவும்.
மேலும் கே பி ஜோதிட முறையில் ஜோதிடம் கற்க வேண்டுமென்றால் தொடர்ந்து இந்த வெப்சைட்டை படித்து வரவும்.