How to identify Rahu Ketu story in astrology Tamil

ராகு கேது (Rahu Ketu) கிரகங்கள் உருவாவதற்கான காரணம் :

ராகு கேது என்பவை மற்ற கிரகங்களைப் போல் நிஜமான கிரகங்கள் அல்ல துணைக் கோளும் அல்ல.  அது இரண்டும் கற்பனையான  நிழல் கிரகங்கள் (Shadow planets) ஆகும்.   இதை எப்படி உருவாக்கப்பட்டது என்றால்  சூரியனை  மையமாகக்கொண்டு பூமி நீள்வட்டப்பாதையில் (Earth elliptical orbit)  சுற்றி  வருகிறது. அதேபோல் சந்திரன் பூமியைச் சுற்றி (Moon orbit)  வளம் வருகிறது. இதனடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் ராகு – கேது. rahu ketu story in tamil

சூரியனைச் சுற்றி பூமி, பூமியைச் சுற்றி சந்திரன் வரும்பொழுது  இரண்டு விதமான வெட்டுப்புள்ளிகள்  ஏற்படுகிறது.  அதாவது பூமியின் நீள்வட்டப்பாதையில் (Earth orbit)   மற்றும் சந்திரனின்  சுற்றுப்பாதையில் (Moon orbit)  இணையும் வெட்டும் புள்ளிகள் ராகு – கேது எனப்படுகிறது.  இதை படத்தில்  விரிவாக பார்க்கலாம்.

Rahu Ketu history kp astrology in tamil

கிரக  காரகங்கள் – ராகு : (KP Astrology in tamil)

கே.பி ஜோதிடத்தில் ராகுவை மோட்ச காரகன் என்று அழைக்கிறோம். ராகு என்பது ஒரு நிழல் கிரகமாகவும்.  ராகு கேதுவை பாம்பின் அம்சமாக மரபு ஜோதிடத்தில் கூறப்படுகிறது. பாம்பின் தலைப்பகுதி ராகு என்றும் பாம்பின் வால் பகுதி கேது என்றும் நம் முன்னோர்கள்  ஜோதிடத்தில்  குறிப்பிட்டுள்ளனர். ராகுவின் பெரும்பாலான காரணங்கள் சனியைப் போன்று இருக்கும். தசா காலங்கள் கூட ஏறக்குறைய சனியின் தசா காலங்கள் ஒட்டியே இருக்கும். சனியின் தசா காலங்கள் 19 வருடங்கள் ராகுவின் தசா காலங்கள் 18  வருடங்கள்.

  • ராகு என்பது பிரம்மாண்டத்திற்கு காரகன்,  எதையும் பெரிதுபடுத்துவது, விகாரம் போன்றவை ராகு காரகனாவார்
  • கண்ணுக்குப் புலனாகாத ஆவிகள், பேய்கள், பிசாசுகள், மாந்திரீகம், செய்வினை போன்றவைகளுக்கு ராகு காரகனாவார்
  • விஷத்தன்மை உள்ள உணவுகளுக்கு, விஷத்தன்மையுள்ள ஜந்துகளுக்கு ராகு காரகனாவார்
  • போட்டோ, சினிமாதுறை, மின்சாரம், சிறைச்சாலை போன்றவை ராகு காரகனாவார்
  • மது மற்றும் போதை பொருட்களுக்கு ராகு காரகனாவார்
  • திருட்டை பெரிய அளவில் செயல்படும் பெரும் கொள்ளை, ஆள் கடத்தல், கடற்கொள்ளை,  வெளிநாட்டு சதி போன்றவை ராகு காரகனாவார்
  • வெளி நாட்டையும், அன்னிய மதங்களையும், அன்னிய மொழிகளையும், வெளிநாட்டு தொடர்புகளையும், ஏற்றுமதி, இறக்குமதி போன்றவை ராகு காரகனாவார்.
  • இயற்கை சீற்றத்தால் ஏற்படும் மரணங்கள்,  பேருந்து மற்றும் புகைவண்டி போன்றவற்றால் ஏற்படும் பிரம்மாண்ட கூட்டு மரணங்கள்
  • உறவில் தந்தை வழி வம்சத்தில் தாத்தா பாட்டி 
  • எதையும் மிகைப்படுத்தி சிந்தித்தல், மோசடி, வித்தைகள், வழக்கத்துக்கு மாறான  செய்கை
  • சமுதாயத்திற்கு பொருந்தாத ஓரினச்சேர்க்கை,  கூட்டுகலவி,  ரத்த பந்தகளுக்கிடையே தகாத பாலின உறவுகள் ராகு காரகனாவார்
  • சுவாசம், நுரையீரல், பெருங்குடல், அலர்ஜியால் ஏற்படும் தடிப்புகள், புற்றுநோய் போன்றவை ராகு காரகனாவார்
  • மலட்டுத்தன்மைக்கு காரணம் ராகு காரகனாவார்

உலகில் எனப்படும் கூட்டு மரணங்களுக்கு ஜோதிடத்தில் ஆய்வு செய்யும்போது ராகுவின் கோச்சாரத்தில் நடைபெறுகிறது. ராகுவை அசுப தன்மை கொண்ட கிரகமாக கருதப்படுகிறது. rahu ketu story in tamil

பாலினம்- அலி

 நிறம் -கருப்பு 

 நவதானியம்- உளுந்து

 உலோகம்-  கருங்கள்

தெய்வம்-  துர்க்கை

கிரக ஸ்தானம்-  காளஹஸ்தி, திருநாகேஸ்வரம்

சமித்து- அருகு

புஷ்பம்-     மந்தாமரை 

சுவை-   புளிப்பு

நவரத்தினம்- கோமேதகம்

நோய்- பித்தம் 

திசை- தென்மேற்கு 

ஆகியவையெல்லாம் ராகுவின் காரகங்கள் ஆகும்.

அடுத்ததாக குருவின் காரகங்களை தெரிந்துகொள்ள கீழே  கொடுக்கப்பட்டுள்ள பட்டனை கிளிக் செய்யவும்.

Jathagam parpathu eppadi in tamil :


நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்களின் காரகத்துவங்கள்  லிங்க் (Link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.