How to Know astrology about Mars planet in Tamil

MARS PLANET SIGNIFICANCE : KP ASTROLOGY IN TAMIL

செவ்வாயின் காரகத்துவங்கள் :

கேபி ஜோதிடத்தில் (kp astrology) செவ்வாயை (Mars Planet) பூமிகாரகன் என்றும், சகோதர காரகன் என்றும், பெண்களுக்கு களஸ்திர காரகன் என்றும் குறிப்பிடப்படுகிறது. செவ்வாய் கிரகம் நாம் வாழும் பூமியை  போல வாழ்வதற்கு  ஏற்ப தட்பவெப்ப சூழ்நிலை உள்ளது. செவ்வாயில் கரடுமுரடான  நிலப்பரப்பையும்,  உயரமான மலைப் பகுதியையும் கொண்டது. எனவேதான் செவ்வாயை பூமிகாரகன் என்று அழைக்கிறோம். sevvai kiragam

 நிலங்களுக்காக சண்டையிட்டுக் கொண்டு உறவுமுறைகளில் நிலங்களைப் பிரித்துக்  எடுத்துக்கொள்ளும் சகோதரா உறவு முறைக்கு  செவ்வாய் காரகனாவார். எனவேதான் செவ்வாயை சகோதர காரகன் என்று அழைக்கப்படுகிறது. மேலும் வாரிசுகளின் அடிப்படையில் ஆண், பெண் (brothers and sisters) இருபாலருக்கும்  சகோதர  காரகராகவும்,  அதேபோல்  திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு மட்டும் களத்திர காரகனாக செவ்வாய் உள்ளார். எனவேதான் செவ்வாயை பெண்களுக்கு களஸ்திர காரகன் என்று அழைக்கப்படுகிறது. (குறிப்பு:  ஆண்களுக்கு களத்திரகாரகன் சுக்கிரன்).

செவ்வாய்  சூரிய குடும்பத்தில்  நான்காவது  கிரகமாகும்.  செவ்வாய் சூரியனை  மையமாகக் கொண்டு  வட்டப்பாதையில் 20 கொடியே 85  லட்சம்  கிலோமீட்டர் தூரத்தில்  இருந்து  சுற்றி வருகிறது. இதன் விட்டம் ( diameter) 6779  கிலோமீட்டர் அளவைக் கொண்டது. செவ்வாய் தன்னைத்தானே 24  மணி 36நிமிடத்தில் (24.6 hours mars time) சுற்றி வருகிறது. மேலும் சூரியனை ஒரு முறை சுற்றிவர 687 (Earth days)  நாட்கள் ஆகின்றது. mars planet

Chevvai dosham in tamil astrology

செவ்வாயின் காரகங்கள் : Chevvai dosham in tamil astrology

 • நிலத்தின் மீது ஆசை உடையவர், மற்றவர் நிலத்தை அபகரிப்பது, தனது நிலத்தை மற்றவர் ஆக்கிரமிப்பிலிருந்து  காப்பாற்றிக்கொள்வது.
 • பெண்ணிற்கு கணவன்,  ஆண் பெண் இரண்டு பேருக்கும் சகோதரன்,  பெண்ணாக இருந்தாலும் சரிஆணாக இருந்தாலும் சரி மைத்துனன்
 • வீரம், ஆபத்து மிகுந்த காரியங்கள், வீர விளையாட்டு
 • பூமி, மனை, சமையல் கூடம், ரியல் எஸ்டேட், முட்செடி, வறட்சியான நிலங்கள், செம்மண்
 • சொத்துக்களில் வாரிசு உரிமைக்காக அடிக்கடி சண்டை போடும் உடன்பிறப்புகள் ஆன சகோதரர்கள்.
 • சண்டை   சச்சரவுகளுக்கும்,   போர்முனைகளுக்கும்,  போர்   வீரர்களுக்கும், போர் கருவிகளுக்கும்  (துப்பாக்கி, கூர்மையான ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள்).
 • சண்டை, பகைமை, தாக்குதல், விபத்து, ரத்தம், ரத்தக் காயங்கள், ஆயுதங்கள், வெடி மருந்து, வெடிவிபத்து, ரசாயனம், அதிக ஆபத்தான நெருப்பு, ஆணவம், ஆத்திரம், கோபம், பிடிவாதம், இயந்திரங்கள் போன்றவை செவ்வாயின் காரகங்கள்
 • வலி வேதனை, காயங்கள், கோர விபத்துக்கள், கொடூர மரணங்கள்,  கொலைகள், மற்றவர்களால் தண்டிக்கப்படுதல். 
 • முன்கோபம், பிடிவாதம், விவாதம் செய்பவர், மற்றவர்களுக்கு  கட்டுப்படாமல் இருத்தல்.
 • உடல் வலிமையை தீர்மானிக்கும்  தசைகளுக்கும்,  கட்டுமஸ்தான   உடல்வாகும்.
 • உடல் வலிமை, மன வலிமை உடைய ஆபத்து நிறைந்த வீர விளையாட்டுகளான குத்துச்சண்டை,  கராத்தே,  மஞ்சுவிரட்டு போன்ற வீர  விளையாட்டுகள்.
 • போர்க்குணம், வீரம், துணிவு, அடக்கி கொடுக்கும் தன்மை, எடுத்த காரியம் எதுவாகினும் செய்து  முடிக்கும் ஆற்றல்.
 • புரட்சி செய்தல், உடல் வலிமையை பயன்படுத்துதல்,  மற்றவர்கள் படும் துன்பத்தை ரசிப்பவர் 
 • பெண்ணை அடக்கி ஆளுமை செய்யும் கணவர்
 • கடன், வழக்கு, சண்டை, சச்சரவுகள், துரோகம், தீவிரவாதம், ஊழல்
 • மன உளைச்சல், அமைதியின்மை, பதற்றம்
 • சட்ட ஒழுங்கை கெடுக்கும் சமூக விரோதிகள், தீவிரவாதிகள்
 • சட்ட ஒழுங்கை காப்பாற்றும்  காவல்துறை, ராணுவத் துறை, தீயணைப்பு துறை ஆகிய ஆபத்து நிறைந்த துறைகள்.

போன்ற  காரகங்கள் அனைத்தும் செவ்வாயின் காரகங்கள் ஆகும். கிரகங்களில் செவ்வாய் கிரகத்தை அசுப கிரகமாக கருதப்படுகிறது. sevvai kiragam

பாலினம்-  ஆண்

நிறம் – சிவப்பு 

உலோகம்-  செம்பு 

கிரக ஸ்தானம்- வைத்தீஸ்வரன் கோயில்

தெய்வம்-  முருகன்

நவரத்தினம்- பவளம் 

சுவை-  துவர்ப்பு

நோய்- பித்தம் 

நவதானியம்- துவரை 

திசை-  தெற்கு 

பஞ்சபூதம்-நெருப்பு 

சமித்து- கருங்காலி 

புஷ்பம்-  செம்பக மலர் 

செவ்வாயின் காரகங்கள் அனைத்தையும் இந்தப் பதிவில் பார்த்தோம். 

அடுத்ததாக ராகுவின் காரகங்களை தெரிந்துகொள்ள கீழே  கொடுக்கப்பட்டுள்ள பட்டனை கிளிக் செய்யவும்.


Jathagam parpathu eppadi in tamil :

நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்களின் காரகத்துவங்கள்  லிங்க் (Link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.