HOW TO KNOW JANMA RASI – JANMA NATCHATHIRAM IN ASTROLOGY
பாரம்பரிய முறையில் (VEDIC ASTROLOGY):
ஜென்ம ராசி ஜென்ம நட்சத்திரம் கணித்தல்:
today natchathiram rasi in tamil
பாரம்பரிய ஜோதிடத்தில் (Vedic astrology) ஒரு குழந்தை பிறக்கும்போது அன்றைய தேதியின்படி பஞ்சாங்கத்தை கொண்டு சந்திரன் எந்த ராசியில் உள்ளதோ அதை ஜென்ம ராசி என்றும், எந்த நட்சத்திரத்தில் உள்ளதோ அதை ஜென்ம நட்சத்திரம் என்றும் கூறப்படுகிறது. பஞ்சாங்கம் என்பது நவீன கருவிகள் இல்லாதபோது அக்காலகட்டங்களில் மகரிஷிகள் தங்கள் ஞானத்தால் கிரகங்களின் நகர்வுகளை மற்றும் நிலைகளை அறிந்து உருவாக்கப்பட்டதுதான் பஞ்சாங்கம்..பாரம்பரிய ஜோதிடத்தில் ராசி என்பது 30 டிகிரி, நட்சத்திரம் என்பது 13 டிகிரி 20 நிமிடங்கள், ஒரு பாதம் என்பது 3 டிகிரி 20 நிமிடங்கள் அளவைக் கொண்டது. பாரம்பரிய ஜோதிடத்தை கீழே வரைபடத்தின் மூலம் பார்க்கலாம். today natchathiram rasi in tamil

உதாரண ஒரு குழந்தை பிறக்கும் போது அன்றைய தேதியின்படி சந்திரன் ரிஷப ராசியில் உள்ளது என்று எடுத்துக்கொள்வோம். பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சந்திரன் செல்லும் நட்சத்திரத்தை நாழிகையில் குறிப்பிட்டிருக்கும். சந்திரன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் பயணம் செல்வர். அதேபோல் 27 நட்சத்திரங்களை கடக்க 27 நாட்கள் பயணம் செல்வார் சந்திரன்.
ஒரு நட்சத்திரத்தை சந்திரன் கடப்பதற்கு 60 நாளிகை எடுத்துக்கொள்கிறது. நாழிகை என்பது முதல் நாள் சூரிய உதயத்திலிருந்து அடுத்த நாள் சூரிய உதயம் வரை 60 நாழிகை என்றும் அது ஒரு நாள் கணக்கு என்றும் கூறப்படுகிறது. ஒரு நட்சத்திரம் நான்கு பாதங்களை கொண்டது. மேலும் ஒரு நட்சத்திர பாதம் 15 நாளிகை அளவைக் கொண்டது. பிறக்கும் குழந்தையின் நேரத்தைக் கொண்டு நான்கு பாதங்களில் எந்த பாதத்தில் (பாதம் 1, 2, 3, 4) வருகிறது என்பதை நாழிகையை கொண்டு கணக்கிடப்படுகிறது. மேலும் இவ்வாறாக பிறக்கும் நேரத்தை கொண்டு குழந்தைகளின் நட்சத்திர பாதம் கணக்கிடப்படுகிறது. பாரம்பரிய ஜோதிடத்தில் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சந்திரன் பயணம் செல்லும் நட்சத்திரத்தை கொண்டு நாழிகையின் அடிப்படையில் தசா-புத்திகள் கணக்கிடப்படுகிறது. பிறக்கும் நேரத்தை பழைய ஜாதக புத்தகத்தில் நாழிகை, வினாடிகளில் குறிக்கப்பட்டிருக்கும். today natchathiram rasi in tamil
Jathagam parpathu eppadi in tamil :
பஞ்சாங்கத்தின் அடிப்படையில் உள்ள நாழிகை விவரங்கள் :
ஒரு நாழிகை – 24 நிமிடம்
ஒரு நாள் – 60 நாழிகை
2 ½ வினாடி – ஒரு நிமிடம்
ஒரு வினாடி – 0.4 நிமிடம்
ஜென்ம ராசி, ஜென்ம நட்சத்திரம் (JANMA RASI – JANMA NATCHATHIRAM) கணிப்பதற்குஉதாரணமாக ஒரு குழந்தை பிறக்கும்போது பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சந்திரன் ரிஷப ராசியில் பயணம் செய்கிறார் என்பதை எடுத்துக்கொள்வோம்.

ரிஷப ராசியில் நட்சத்திரங்கள் மற்றும் பாதங்கள் :
கிருத்திகை 2,3,4 = 3 ͒ 20’ +3 ͒ 20’+3 ͒ 20’ = 10 ͒ 00’
ரோகிணி 1,2,3,4 = 3 ͒ 20’ +3 ͒ 20’+3 ͒ 20’+ 3 ͒ 20’ = 13 ͒ 20’
மிருகசீரிஷம் 1,2 = 3 ͒ 20’ +3 ͒ 20 = 6 ͒ 40’

மேற்கொண்ட வரைபடத்தில் சந்திரன் ரிஷப ராசியில் 11 டிகிரி 30 மினிட் என்று எடுத்துக்கொண்டால் கார்த்திகை நட்சத்திரம் 10 டிகிரியில் முடிவடைகிறது. பத்தாவது டிகிரியில் இருந்து ரோகிணி நட்சத்திரம் ஆரம்பமாகிறது. இதில் 11 டிகிரி 30 மினிட் என்பதால் ரோகிணி நட்சத்திரம் – ஒன்றாம் பாதத்தில் வருகிறது. பாரம்பரிய ஜோதிட முறையில் டிகிரி கணிப்பதற்கு பஞ்சாங்க முறையில் நாளிகையை கொண்டு கணக்கிடப்படுகிறது. இப்படியாக ஜென்ம ராசி ஜென்ம நட்சத்திரம் (JANMA RASI – JANMA NATCHATHIRAM) கணிக்கப்படுகிறது.
NOTE : சூரிய உதய நாழிகை என்றால் என்ன ? மற்றும் நாளிகை – வினாடி ஆகியவற்றைக் கொண்டு எவ்வாறு டிகிரி – மினிட் கணக்கிடுவது என்பதை வேறு பதில் பார்க்கலாம்.
பாரம்பரிய ஜோதிட முறையில் ஜென்ம ராசி, ஜென்ம நட்சத்திரம் கணிப்பதை பார்த்தோம்.
கேபி ஜோதிட முறையில் ஜென்ம ராசி, ஜென்ம நட்சத்திரம் கணிக்கும் முறையை தெரிந்துகொள்ள கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்களின் காரகத்துவங்கள் லிங்க் (Link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.