HOW TO LEARN 9 PLANETS IN SOLAR SYSTEM KP ASTROLOGY TAMIL
9 planets in solar system in Tamil
ஒன்பது கிரக காரகங்கள் :
கே.பி ஜோதிட முறையில் கிரக காரகங்கள் என்பது மிக முக்கியமானது. பொதுவாக ஜோதிடத்தில் விதி, மதி இரண்டு பிரிவுகள் உள்ளன. விதி என்றால் பாவ காரகங்கள் என்றும் மதி என்றால் கிரக காரகங்கள் என்று பொருள். விதி என்றால் ஒருவர் பிறக்கும்போது நிர்ணயிக்கப்பட்டது. எந்த ஒரு செயலையும் விதியில் இருந்தால்தான் அதை மதி வழியாக செயல்படுத்த முடியும். 9 planets in solar system in tamil
கே.பி ஜோதிடத்தில் மதி என்றால் தற்போது நடைமுறையில் என்னென்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக பயன்படுத்துகிறோம். மேலும் மதியை கொண்டு தசா-புத்திகள்- அந்தரம்- சூட்சமம்- பிராணா என்ற முறையில் ஒருவருடைய ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யபடுகிறது. நாம் நினைவில் கொள்ளவேண்டியது
விதி என்றால் 12 பாவங்கள், மதி என்றால் தசா புத்திகள்
ஒன்பது கிரக காரகங்கள் : (NINE PLANETS)
சூரியன் (SUN)
சந்திரன் ( MOON)
செவ்வாய் (MARS)
ராகு ( RAKU)
குரு (JUPITER
சனி (SATURN)
புதன் (MERCURY)
கேது (KETU)
சுக்கிரன் (VENUS)

முதலில் சூரியனின் கிரக காரகத்துவங்களை பார்க்கலாம்.
Jathagam parpathu eppadi in tamil :
கிரக காரகங்கள் – சூரியன் (SUN) :
சூரியனை ஞாயிறு என்றும் கதிரவன் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனின் உட்புற வெப்பச்சலனம் காரணமாக அது இயக்கவியல் (Kinetics energy) செயல்முறையின் மூலம் காந்த ஈர்ப்பு விசையை உருவாக்குகிறது. சூரியனின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையை விட சுமார் 30 மடங்கு அதிகமாக இருக்கிறது. இதனால்தான் சூரியனைச் சுற்றி உள்ள அனைத்து கோள்களும் ஈர்க்கப்பட்டு ஒரே வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. இதனால்தான் சூரியனை அனைத்து கோள்களுக்கும் தலைவர் என்று அழைக்கிறோம்.
சூரியன் நாம் வாழும் பூமியை விட 109 மடங்கு பெரியது. இதனுடைய விட்டம் சுமார் 13 லட்சத்து 90 ஆயிரம் கிலோமீட்டர்கள் ஆகும். சூரியன் முற்றிலும் வாய்வு பொருள்களால் நிரம்பி உள்ளது. சூரியன் பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. KP ASTROLOGY BOOKS
சூரிய குடும்பத்தில் தலைவன் சூரியன் என்பது போல் நமது கும்பத்திற்கு தலைவன் என்றாள் தந்தை. எனவே சூரியனை குடும்ப உறவில் தந்தை, தந்தையை சார்ந்த வர்க்கத்தினரையும் குறிக்கும். ஜோதிடத்தில் சூரியனை தந்தை காரகன் என்று அழைக்கிறோம்.

சூரியனை கொண்டு இயங்கும் உறுப்புகள்:
கண்கள், கண் பார்வை, தலை. மூளை, இருதயம், எலும்புகள், முதுகுத்தண்டு, உடல் உஷ்ணம்
சூரியனின் காரகங்கள் :
- ஆன்மா, மருத்துவர், மருத்துவ பொருட்கள் ஆகியவை சூரியனின் காரகங்களாகும்
- தனித்தன்மை, தன்னம்பிக்கை, புகழ், தலைமை பதவி போன்றவை
- தந்தை, தந்தை வர்க்கத்தினர், மூத்த மகன் போன்றவை சூரியனின் காரகங்கள்
- நாட்டு தலைவர்கள், கட்சித் தலைவர்கள், மேலதிகாரிகள் போன்றவை
- மனோதிடம், நேர்மை, நிர்வாகத்திறன், நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள், தூய உள்ளம் போன்றவர்கள் சூரியனின் காரகங்கள்
- உத்தியோகம், கம்பீரமான தோற்றம், தானென்ற கவுரவம், சுயமரியாதை, வைராக்கியம், வெளிப்படையான நடத்தை, எதிரியை சிறைப்பிடிப்பது போன்றவர்கள்
- அரசியல், அரசாங்கம், அரசு அதிகாரிகள், மதிப்பு மரியாதை, ஆளுமை தன்மை, அதிகாரம் போன்றவர்கள் சூரியனின் காரகங்கள்
- கூரை, பந்தல், மேடு, மலை, உயரமான இடம், தங்கும் விடுதிகள், அரசாங்க விடுதிகள், அரசு கட்டிடங்கள், கோட்டை.
- அதிர்ஷ்டம், வாடகை வருவாய் தரும் கட்டிடங்கள், காரம் மிகுந்த உணவுகள்.
- தேன், பிரகாசமான பொருட்கள், ராஜ பதவி, சம்பாத்தியம், வலிமை, ஆண்மை, தூய்மை, ஆன்ம சக்தி, தந்தைவழிச் சொத்து, தந்தைவழி உறவுகள், தங்க ஆபரணங்கள், நீதிபதி, காடுகள், மந்திரம், தலை, தலைமுடி தோற்றம், அடிவயிறு.
- காய்ச்சல், வைத்தியம் , நோயாளி பெண்ணுடன் சுகம் காணுதல், துணிச்சல், வெளிச்சம், கிராம வாழ்க்கை, வெளிநாட்டு லாபம், சிவ வழிபாடு, மரம், துஷ்டத்தனம், ருசி, சுவை, மேல் நோக்கு பார்வை, தன்னை உணர்தல்,
- புல் வட்ட வடிவம், சதுரம், நாட்டின் அதிபதி, அரசமைப்பு, அரசு சேவை.
- பேச்சாற்றல், வழக்கறிஞர், மருந்து தயாரிப்பு, கட்டுமான பொருட்கள், விபூதி, கற்பூரம், நிர்வகித்தல், கால்நடைகள்.
போன்ற காரகங்களை சூரியனைக் கொண்டு பலன் கூறப்படுகிறது. கேபி ஜோதிடத்தில் (KP ASTROLOGY ) பாவ காரகங்களில் லக்ன பாவமே பிரதானமானது. அதேபோல் கிரக காரகங்கள் சூரியனே பிரதானமானது. ஜாதகத்தில் சூரியனின் சூரிய உதயத்தை கொண்டுதான் லக்னம் கணிக்கப்படுகிறது. மேலும் சூரியன் மற்ற கிரக கிரகங்கள் மற்றும் 12 பாவ காரகங்களை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது ஒருவரின் விதியை நிர்ணயம் செய்வது சூரியனே ஆகும்.
பாலினம்- ஆண்
நிறம் -சிவப்பு
உலோகம்- தாமிரம்
தெய்வம்- சிவன்
கிரக ஸ்தானம்- ஆடுதுறை சூரிய நாராயண மூர்த்தி
நவரத்தினம்- மாணிக்கம்
புஷ்பம்- செந்தாமரை
சமித்து- எருக்கு
நவதானியம்- கோதுமை
சுவை- காரம்
நோய்- பித்தம்
திசை கிழக்கு
பஞ்சபூதம்- நெருப்பு
பொழுது- தற்பொழுது
இடங்கள்- காடு மலை பாறை
விலங்கு- சிங்கம்
ஆகியவை எல்லாம் சூரியனின் காரகங்கள் ஆகும்.
அடுத்ததாக சந்திரனின் காரகங்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்களின் காரகத்துவங்கள் லிங்க் (Link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.