How to Know 12 house in astrology and their loads in Tamil
12 BHAVAM (House) IN KP ASTROLOGY TAMIL
ஜோதிடத்தில் பாரம்பரிய முறைப்படி ராசிகள் என்றாலும் வீடுகள் என்றாலும் ஒன்றுதான். ஆனால் கேபி ஜோதிடத்தில் (ராசிகளை பாவங்கள் ( bhavam ) என்று அழைக்கப்படுகிறது. பாரம்பரிய முறைப்படி ஒவ்வொன்றும் ராசி கட்டத்தையும் 30 டிகிரி என்ற விகிதத்தில் 360 டிகிரியை சமமாக பிரிக்கப்பட்டுள்ளது. காலபுருஷ தத்துவத்தின்படி மேஷத்தில் ஆரம்பித்து மீனத்தில் முடிவடைகிறது. (KP ASTROLOGY IN TAMIL

ஆனால் கேபி ஜோதிட முறையில் பார்க்கும் பொழுது ராசிகள், பாவங்கள் இரண்டுமே வெவ்வேறாக கருதப்படுகிறது. சூரியனைச் சுற்றி அனைத்து கோள்களும் நீள் வட்ட பாதையில் சுற்றி வருவதால் பாவங்களின் டிகிரி வேறுபடுகிறது. ஒரு குழந்தை பிறக்கும்போது எந்த பாவத்தில் லக்னம் புள்ளி விழுகிறதோ அதை முதல் பாவமாக நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது ஒருவர் பிறக்கும்போது ராசி மண்டலத்தை 12 பாகங்களாக பிரித்தால் அது சமமாக 30 டிகிரி என்ற விகிதத்தில் வருவதில்லை. பாவங்களின் அளவு 30 டிகிரிக்கு குறைவாகவும் 30 டிகிரிக்கு அதிகமாகும் காணப்படுகிறது. பாவங்களை கீழ்க்கண்டவாறு வரைபடத்தில் காணலாம்.

மேஷ லக்னம் ஒன்றாம் பாகம் ஆரம்பம்:
பொதுவாக லக்னம் மேஷ ராசியில் விழுந்தாள் முதல் பாவம் மேஷ ராசியில் இருந்து தொடங்கி மீனராசியில் பன்னிரண்டாவது பாவமாக முடிவடையும். உதாரணம் 1.

தனுசு லக்னம் ஒன்றாம் பாகம் ஆரம்பம்:
லக்னம் தனுசு ராசியில் விழுந்தாள் முதல் பாவம் தனுசு ராசியில் இருந்து தொடங்கி விருச்சக ராசியில் பன்னிரண்டாவது பாவமாக முடிவடையும். உதாரணம் 2.

மேலும் பூமியானது காலச்சக்கரத்தின் பூஜ்ஜியம் டிகிரியில் இருந்து மெல்ல மெல்ல நகர்ந்து தனது சுற்றுவட்ட பாதையில் உள்ள மையப்புள்ளியை மாற்றிக் கொண்டே செல்கிறது. இது சுமாராக 26000 வருடத்துக்கு ஒருமுறை தனது வட்டப் பாதையை ஒரு முறை சுற்றி வருகிறது. இதை நாம் அயனாம்சம் என்று குறிப்பிடுகிறோம்.
ஜோதிடத்தில் அயனாம்சம் என்பது மிக முக்கியமானது. எனவே அயனாம்சம் சரியாக கணிக்க வில்லை என்றால் பூமியிலிருந்து ஒவ்வொரு கிரகத்திற்கும் உள்ள டிகிரியை நாம் துல்லியமாக கணிக்க முடியாது.கிரகங்களின் டிகிரியை கொண்டுதான் ஜோதிடத்தில் பலன்கள் நிர்ணயம் செய்யப்படும். குறிப்பாக கே பி ஜோதிடத்தில் கிரகங்களின் டிகிரி யின் அளவை மிகத்துல்லியமாக கணக்கிடப்படுகிறது.
இதை நாம் அயனாம்சம் என்ற தலைப்பில் விரிவாக பார்க்கலாம். மேலும் நமது பூமியானது தோராயமாக 23.50 டிகிரி என்ற விகிதத்தில் கிடைமட்டமாக சூரியனை சுற்றி வருகிறது. இதனால் சூரிய உதயத்தின் நேரம் ஒவ்வொரு நாளும் வித்தியாசப்படுகிறது. இதனால்தான் இளவேனில்காலம், முதுவேனில்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், கார்காலம் போன்ற காலங்கள் வருகின்றன. பூமியானது தோராயமாக 24.00 டிகிரி விகிதத்தில் இல்லையெனில் இந்த காலங்கள் இல்லாமல் ஒரே நிலையாக இருந்திருக்கும்.
இந்த டிகிரி விகிதத்தை பிளாஸிடஸ் (Placidus) என்ற முறையை பயன்படுத்தி பிரிக்கப்படுகிறது. கே பி ஜோதிட முறையில் (KP ASTROLOGY TAMIL ) ஒருவர் பிறக்கும் போது ராசி கட்டத்தில் உள்ள 12 பாவங்களை டிகிரி வாரியாக பிரிக்க பிளாஸிடஸ் (Placidus) என்ற விதியை கொண்டு கணக்கிடப்படுகிறதுது.
KP ASTROLOGY 12 BAVAM DEGREE WISE SHOWING:

மேற்கொண்ட வரைபடத்தின் மூலம் பாவங்களை டிகிரி வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக பிரிக்கும் பொழுது ஒருவர் பிறக்கும்போது லக்னத்தின் அடிப்படையில் லக்னத்தை முதல் பாவமாகும் அடுத்தடுத்த பாகங்களை இரண்டாம் பாவத்தில் இருந்து பன்னிரண்டாம் பாவம் வரை குறிப்பிடப்படும். (12 houses in astrology and their lords)
வரைபடத்தில் பாவங்களின் உள்ள டிகிரியை கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளன.
பாவங்கள் | ஆரம்ப டிகிரி | முடிவு டிகிரி | டிகிரி வித்தியாசம் |
---|---|---|---|
முதல் பாவம் | 17° 14 ‘ 27″ | 19° 38 ‘ 09″ | 32° 23 ‘ 42″ |
இரண்டாம் பாவம் | 19° 38 ‘ 09″ | 24° 09 ‘ 46″ | 34° 31 ‘ 37″ |
மூன்றாம் பாவம் | 24° 09 ‘ 46″ | 27° 13 ‘ 24″ | 33° 03 ’38” |
நான்காம் பாவம் | 27° 13 ‘ 24″ | 26° 12 ‘ 57″ | 28° 59 ’33” |
ஐந்தாம் பாவம் | 26° 12 ‘ 57″ | 21° 59 ‘ 01″ | 25° 46 ’04” |
ஆறாம் பாவம் | 21° 59 ‘ 01″ | 17° 14 ‘ 27″ | 25° 15′ 26″ |
ஏழாம் பாவம் | 17° 14 ‘ 27″ | 19° 38 ‘ 09″ | 32° 23 ‘ 42″ |
எட்டாம் பாவம் | 19° 38 ‘ 09″ | 24° 09 ‘ 46″ | 34° 31 ‘ 37″ |
ஒன்பதாம் பாவம் | 24° 09 ‘ 46″ | 27° 13 ‘ 24″ | 33° 03 ’38” |
பத்தாம் பாவம் | 27° 13 ‘ 24″ | 26° 12 ‘ 57″ | 28° 59 ’33” |
பதினொன்றாம் பாவம் | 26° 12 ‘ 57″ | 21° 59 ‘ 01″ | 25° 46 ’04” |
பன்னிரண்டாம் பாவம் | 21° 59 ‘ 01″ | 17° 14 ‘ 27″ | 25° 15′ 26″ |
Total Degree | 360° 00′ 00″ |
உதாரணமாக நீங்கள் புரிந்து கொள்வதற்காக முதல் பாவத்தை கணக்கிடுவோம்.
ராசி என்பது 30 டிகிரி இது நிலையானது. ஆனால் பாவங்கள் நிலையற்றது.
30° 00′ 00″ – 17° 14 ‘ 27″ = 12° 45 ‘ 33″
12° 45 ‘ 33″ + 19° 38 ‘ 09″ = 32° 23 ‘ 42″
இவ்வாறாக ஒன்றாம் பாவத்தில் இருந்து பன்னிரண்டாம் பாவம் வரை உள்ள வித்தியாசத்தை கொடுக்கப்பட்டுள்ளது.
NOTE : பிளாஸிடஸ் (Placidus) முறை என்றால் என்ன என்பதை வேற பதிவில் பார்க்கலாம்.
Jathagam parpathu eppadi in tamil :
நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்களின் காரகத்துவங்கள் லிங்க் (Link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.