HOW TO KNOW RASI MANDALAM IN TAMIL ASTROLOGY
ASTROLOGY IN TAMIL – RASI MANDALAM
ராசி மண்டலம் என்பது காலசக்கரத்தின்படி மேஷ ராசியில் தொடங்கி மீனராசியில் முடிவடைகிறது. இந்த rasi kattam உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு அதிபதி உள்ளது. அதாவது ராசிக்கட்டத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் ஒரு கிரகம் தனது சொந்த வீடாக கருதி ஆளுமை செய்கிறது. இவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ராசி அதிபதிகள்
மேஷம்,விருச்சகம் – செவ்வாய்
ரிஷபம்,துலாம் – சுக்கிரன்
மிதுனம்,கன்னி – புதன்
கடகம் – சூரியன்
சிம்மம் – சந்திரன்
மகரம், கும்பம் – சனி
மீனம், தனுசு – குரு

ராசி மண்டலம் என்பது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளும், சூரியன் முதல் கேது வரை 9 நவக்கிரகங்களும், அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களும் கூட்டுத் தொகையாக கொண்டு மொத்தம் 48 ஆக இருக்கிறது.
இந்த கூட்டுத் தொகையை 48 மண்டல நாட்களாக குறிப்பிட்டு எந்த ஒரு செயலையும் 48 நாட்கள் தொடர்ந்து செயற்பட்டால் அது வெற்றிகரமாக நிறைவேறும் என்பது ஒரு நம்பிக்கை.
ராசி மண்டலத்தில் உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அனைத்திற்கும் சூரியனை தலைமை கிரகமாக கூறப்படுகிறது. சூரியனை அடிப்படையாகக் கொண்டுதான் ராசி மண்டலங்கள் செயல்படுகிறது. சூரியனிடமிருந்து வரும் ஒளிக்கதிர்கள் அனைத்து கிரகங்களுக்கும் மிக அவசியமானது.
அதேபோல் நட்சத்திரங்களின் கதிர்வீச்சுகள் கிரகங்களின் கதிர்வீச்சுகள் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது. மனித வாழ்வில் எந்த ஒரு செயலையும் நன்றாக நடைபெற ராசிகள், நவகிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் ஆகியவற்றின் சக்தி மிக அவசியமானது.
RASI MANDALAM IN DEGREE WISE:

ராசியில் உள்ள பொதுவான விளக்கங்கள்:
ராசி மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு ராசிக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் அதிபதி, திசை, பாலினம், பஞ்சபூதம், குணம், உடல் உறுப்புகள் போன்றவை கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.
வீடு | ராசி | Zodiac | அதிபதி | திசை | பாலினம் | பஞ்சபூதம் | குணம் | உடல் உறுப்புக்கள் |
---|---|---|---|---|---|---|---|---|
1 | மேஷம் | Aries | செவ்வாய் | கிழக்கு | ஆண் | நெருப்பு | சரம் | தலை |
2 | ரிஷபம் | Taurus | சுக்கிரன் | கிழக்கு | பெண் | பூமி | ஸ்திரம் | முகம் |
3 | மிதுனம் | Gemini | புதன் | தென்கிழக்கு | ஆண் | காற்று | உபயம் | கை தோல் |
4 | கடகம் | Cancer | சூரியன் | தெற்கு | பெண் | நீர் | சரம் | மார்பு |
5 | சிம்மம் | Leo | சந்திரன் | தெற்கு | ஆண் | நெருப்பு | ஸ்திரம் | இதயம் |
6 | கன்னி | Virgo | புதன் | தென்மேற்கு | பெண் | பூமி | உபயம் | வயிறு |
7 | துலாம் | Libra | சுக்கிரன் | மேற்கு | ஆண் | காற்று | சரம் | கிட்னி கர்ப்பபை |
8 | விருச்சகம் | Scorpio | செவ்வாய் | மேற்கு | பெண் | நீர் | ஸ்திரம் | மர்மஉறுப்பு |
9 | தனுசு | Sagittarius | குரு | வடமேற்கு | ஆண் | நெருப்பு | உபயம் | ஆசனவாய் |
10 | மகரம் | Capricorn | சனி | வடக்கு | பெண் | பூமி | சரம | தொடை |
11 | கும்பம் | Aquarius | சனி | வடக்கு | ஆண் | காற்று | ஸ்திரம் | முழங்கால் |
12 | மீனம் | Pisces | குரு | வடகிழக்கு | பெண் | நீர் | உபயம் | பாதம் |
ஜோதிட முறையில் ஒருவர் எந்த ராசியில் பிறக்கிறார் என்பதை பொருத்து அவரது ஆரம்ப பலனை நிர்ணயிக்கப்படுகிறது. ராசி மண்டலத்தை மேற்கொண்டு வரைபடத்தின் மூலம் பஞ்சபூதம், குணம், திசை, உடல் உறுப்புகள் ஆகியவற்றை கொடுக்கப்பட்டுள்ளது

Rasi Mandalam in milky way galaxy :
இங்கிலீஷில் Mandalam என்றால் Zone என்று அர்த்தம். இது ஜோதிடத்தில் ராசி மண்டலம் என்று குறிப்பிடுகிறோம். ராசி மண்டலம் என்பது வான் மண்டலத்தில் உள்ள பால்வெளி (Milky way galaxy ) அண்டத்தில் ஒரு சிறிய பகுதி என்பதாகும்.
