why learn KP astrology in Tamil?

KS Krishnamurti Paddhati astrology system :

KS Krishnamurthy paddhati kp astrology software

   KS Krishnamurthy paddhati

கே.பி ஜோதிடம் என்பது  சென்ற நூற்றாண்டில்  வாழ்ந்த கே.ஸ் கிருஷ்ணமூர்த்தி அவர்களால் உருவாக்கப்பட்டது.  இந்த கே.பி  ஜோதிடத்தை  உருவாக்கியதன் மூலம் துல்லியமான பலனை நிர்ணயம் செய்து அதில் வெற்றி  கண்டவர்  கே.எஸ் கிருஷ்ணமூர்த்தி  பத்ததி அவர்கள். இந்த ஜோதிட முறைக்கு “கே.பி சார ஜோதிடம்” (KP stellar astrology)  என்று பெயர். மேலும் கே எஸ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மிகத் துல்லியமாக கணக்கீடுகள் மூலம் ஆராய்ச்சி செய்து வடிவமைக்கப்பட்டது கேபி ஜோதிடம் (KP System). இந்த kp astrology in tamil ஜோதிட முறை என்பது ஒருவர் தனிப்பட்ட ஜாதகர் பலனை  நிர்ணயம் செய்து பலன் கூறுதலாகும்.

KP ASTROLOGY TWINS ANALYSIS :

உதாரணமாக ஒரே  இடத்தில் பிறக்கும் இரட்டை குழந்தைகள் (Twins) நேர வித்யாசம் இரண்டிலிருந்து பத்து நிமிடம் ( 2 to 10 Minutes ) இடைவெளியில் இருக்கும். இதனடிப்படையில் பாரம்பரிய முறையில்  ஜாதகம் கணிக்கும் போது ஒரேமாதிரியான பலனைத்தான் கூறமுடியும். ஆனால்  நடைமுறையில் இரண்டு குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை மாறுபடும்.  இதை நாம்  கேபி ஜோதிட முறையில் மிக துல்லியமாக வேறுபடுத்திக் காட்ட முடியும்.

 kp astrology software, kp astrology in tamil

         Twin analysis – இரட்டைக் குழந்தைகள்

பொதுவாக ராசிச் சக்கரத்தில் உள்ள கிரகங்கள் மற்றும்  நட்சத்திரங்களை மட்டும் கொண்டு ஜாதகம் கணிக்காமல் இன்னும் துல்லியமான முறையில் 9 கிரகங்கள், 27 நட்சத்திரங்கள்  மற்றும் 12 பாகங்களை கொண்டு எத்தனை டிகிரியில் உள்ளது என்று நிர்ணயம் செய்து  அதனை  உட்பிரிவுகளாக பிரித்து பலன் நிர்ணயம் செய்வதுதான் சார ஜோதிட முறையாகும். kp astrology in tamil

WHAT IS KP ASTROLOGY SYSTEM ?

கேபி ஜோதிட முறை என்பது வான் மண்டலத்தில் உள்ள நவகிரகங்கள் சுற்றிக் கொண்டிருக்கும்  இடத்தைவிட, அந்த கிரகங்கள் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ அதன்படி அந்த கிரகங்களின் பலனை மாற்றிக்கொண்டு பலனைத்தரும். இதை சாரம் பலன் என்று அழைக்கிறோம். சாரம் என்றால் நட்சத்திரம். ஒவ்வொரு கிரகத்தையும், சாரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பலனை  நிர்ணயிக்கும்  முறைக்கு “சார ஜோதிட முறை” என்று பெயர்.

உதாரணமாக ஒரு ஜாதக கட்டத்தை எடுத்துக் கொள்வோம்.

kp astrology system

ஒரு குழந்தை பிறக்கும் பொழுது இடம், தேதி, நேரம் ஆகியவற்றைக் கொண்டு கணக்கீடுகள் (Mathematical formula) மூலம் மிகத்துல்லியமாக  முறையில் ஜாதக கட்டம் கணிக்கப்படுகிறது. ஜாதக கட்டங்களில் மொத்தம் ஒன்பது கிரகங்கள் உள்ளன. இந்த ஒன்பது கிரகங்கள் ஒவ்வொன்றும்  ஒவ்வொரு டிகிரியில் உள்ளது. இதில் புதன் கிரகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்வோம். வரைபடத்தில் கடக ராசியை எடுத்துக் கொண்டோம். கடக ராசியில் புதன்  7 ͒ 41′ 04″ டிகிரி அளவில் கொண்டு  பூச நட்சத்திரத்தில் உள்ளது.  பூச நட்சத்திர அதிபதி சனி ஆகும். எனவே  நட்சத்திர அதிபதி சனியே  இந்த புதன் கிரகத்தின் சாரம் பலமாகும்.  kp astrology in tamil

கேபி ஜோதிட முறையில் நட்சத்திர அதிபதி முதலில்  9  உட்பிரிவுகளாக  பிரிக்கப்படுகிறது. இந்த ஒன்பது உட்பிரிவுகளை  விம்சோத்தரி மகா திசை 120 வருடங்கள்  முறையை  பயன்படுத்தி பிரிக்கப்படுகிறது. மேலும் நட்சத்திர  அதிபதியை தொடர்ந்து 9  பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.

நட்சத்திர அதிபதி உட்பிரிவுகளை நான்கு பிரிவுகளாக கீழ்கண்டவாறு சொல்லப்படுகிறது.

  • 1. நட்சத்திர அதிபதி ( star lord )
  • 2. உப நட்சத்திர அதிபதி (sub lord )
  • 3.  உப உப நட்சத்திர அதிபதி  (sub sub lord)
  • 4.  உப உப உப நட்சத்திர அதிபதி  (sub sub sub lord)

கேபி ஜோதிடத்தில் இந்த உட்பிரிவுகளை கொண்டுதான் துல்லியமான பலனை நிர்ணயிக்க முடிகிறது.  இந்த  உட்பிரிவுகளின்  கணக்கிடுதல் முறையை வேறு பதிவுகளில் விரிவாக பார்க்கலாம்.

KP ASTROLOGY SUB LORD THEORY :

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஜோதிட மேதை கோபாலகிருஷ்ணன் (மீனா) (Gopalakrishnan) அவர்களுக்கு ஒரு புதிய சிந்தனை வந்தது.  ஜோதிட துறையை ( astrology system ) அடுத்த பரிமாண வளர்ச்சிக்கு எடுத்து செல்லும் வகையில் அமைய வேண்டும் என்பதற்காக புதிய முறையை உருவாக்கினார்.  ஜோதிடத்தில் நட்சத்திரம் என்றால் திசை.  திசையின் உட்பிரிவு   புத்தி என்று பெயர். பழைய  ஜோதிட முறையில் புத்தியை நாளிகையின் அடிப்படையில்  பிரிக்கப்பட்டது.   இந்த முறையை மாற்றி அமைப்பதற்காக  நட்சத்திரங்களை 9  உப நட்சத்திரங்களாக பிரித்தெடுத்தார்.  ராசி மண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்களை (27 x 9 = 243)  உப நட்சத்திரங்களாக  பிரித்தெடுத்தார். kp astrology in tamil online

அதே காலத்தில் வாழ்ந்த ஜோதிட மாமேதை பேராசிரியர் K.S கிருஷ்ணமூர்த்தி பத்ததி அவர்கள் மேற்கொண்ட உப நட்சத்திரமான 243  உட்பிரிவுகளை  மேலும் மேம்படுத்தினார். அதாவது  நட்சத்திர அதிபதியான சூரியன், குரு  ஆகியவற்றை 9  பிரிவுகளாக பிரிக்கும் பொழுது ராகு, சந்திரன்   உட்பிரிவுகள்  கூடுதலாக வருவதால் 243  உட்பிரிவுகள்  மேலும்  6  உட்பிரிவுகள்   சேர்த்து 249   உட்பிரிவுகளாக  ராசி மண்டலத்தை பிரித்தெடுத்தார்.  இந்த 249  உட்பிரிவுகளை “உப நட்சத்திரம்” ( Sub lord) என்று   பெயர் சூட்டினார்.

கீழ்கண்ட அட்டவணையில்  மேலும் கூடுதல் 6  உப நட்சத்திரங்கள்  எவ்வாறு வந்தது என்று  கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

KP ASTROLOGY SYSTEM – EXTRA 6 SUB LORD TABLE :

உப நட். எண்  ராசி நட்சத்திர அதிபதி  உப  நட்சத்திர அதிபதி  டிகிரி உப நட். மொத்த டிகிரி
22 மேஷம் சூரியன் ராகு 0 ͒  46’ 40”
23 மேஷம் சூரியன் ராகு 1 ͒  13’ 20” 2 ͒  00’ 00”
62   மிதுனம் குரு சந்திரன் 0 ͒  33’ 20”
63  கடகம் குரு சந்திரன் 0 ͒  33’ 20” 1 ͒  06’ 40”
105 சிம்மம் சூரியன் ராகு 0 ͒  46’ 40”
106  கன்னி சூரியன் ராகு 1 ͒  13’ 20” 2 ͒  00’ 00”
145 துலாம் குரு சந்திரன் 0 ͒  33’ 20”
146 விருச்சகம் குரு சந்திரன் 0 ͒  33’ 20” 1 ͒  06’ 40”
188  தனுசு சூரியன் ராகு 0 ͒  46’ 40”
189  மகரம் சூரியன் ராகு 1 ͒  13’ 20” 2 ͒  00’ 00”
228 கும்பம் குரு சந்திரன் 0 ͒  33’ 20”
229  மீனம் குரு சந்திரன் 0 ͒  33’ 20” 1 ͒  06’ 40”

கேபி  ஜோதிடத்தின்  மொத்தம் உள்ள 249  உப நட்சத்திரங்களின்  அட்டவணை தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை கிளிக்  செய்யவும்.

Jathagam parpathu eppadi in tamil :